மாநில அரசைவிட மத்திய அரசுதான் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது!

ஜெ-வை சாடிய மோடி...

மோடி அலையில், மத்தியில் ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி., தமிழகத்தில் காலூன்றுவதற்கே, தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அவர்களிடம் இருந்த ஒரே வலிமையான அஸ்திரம் மோடியின் பிரசாரம். கடந்த 6-ம் தேதி நந்தனம்
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அதை  பிரயோகித்துவிட்டது பி.ஜே.பி.

பிரதமர் வேட்பாளராக இருந்தபோதே மோடியின் கூட்டங்களுக்குப் பல அடுக்குப் பாதுகாப்புகளைக் கடந்துபோக வேண்டும். இப்போது அவர் பிரதமராகவே இருக்கிறார்... கேட்கவா வேண்டும். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் கடுமை யான கட்டுப்பாடுகளால் இறுகிப்போய் இருந்தது. மதியம் 3 மணிக்கே மைதானத்தில் பத்திரிகையாளர்களும் வி.ஐ.பி பாஸ் வாங்கியவர்களும் இருக்கைக்குச் சென்றுவிட்டனர். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் முடியவில்லை என்று சொல்லி, மைதானத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றினர். அதன்பிறகு மீண்டும் மைதானத்துக்குள் போகக் கூடுதலாக ஒரு மணிநேரம் ஆனது.

மோடியின் மேடைக்கு எதிரே சிறிய திறந்தவெளி மேடை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் வேட்பாளர்களும் வி.ஐ.பி-க்களும் அமரவைக்கப்பட்டனர். இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுராம், பவர் ஸ்டார் உள்ளிட்டோர் அந்த மேடையில் அமரவைக்கப்பட்டனர். ஆனால், அதிலும் இடம் இல்லை. அதனால், ஐ.ஜே.கே சார்பில் வேட்பாளர் ஆனந்தகுமாரிக்கு மட்டும் அந்த மேடையில் இடம் கொடுக்கப்பட்டது. மற்றவர்கள் கீழே அமரச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர். அதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பிரதான மேடை ஏற்பாடுகளை பி.ஜே.பி-யின் தமிழக மேலிடப் பார்வையாளர் முரளிதர் ராவ் பார்வையிட்டார். அதன்பிறகு, 5.30 மணிக்கு ஹெச்.ராஜா, இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேடைக்கு வந்தனர். அதன்பிறகு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வெங்கய்ய நாயுடு ஆகியோர் வந்தனர். கடைசியாக ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் வந்தார். கூட்டணித் தலைவர்கள் ஒவ்வொருவராகப் பேசிவிட்டு, அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசிக் கொண்டிருந்தபோது 7.30 மணிக்கு பிரதமர் மோடி மேடைக்கு வந்தார்.

முதல்நாள் தி.மு.க கூட்டணி பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியபோது, ‘‘தமிழக மீனவர்கள் அச்சுறுத்தலில் இருக்கின்றனர். அவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுகின்றனர்’’ என்று குற்றம்சாட்டி இருந்தார். அதை மழுங்கடிக்க நினைத்த பி.ஜே.பி-யினர், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தவர் மோடி என்று சொல்லி, அதற்கு அடையாளமாக மீன்வலையில் செய்யப்பட்ட மாலையையும், மாதிரி நாட்டுப்படகு ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்