பெரியோர்களே... தாய்மார்களே! - 88

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த நம்மை நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் ஆளுகைக்குள் கொண்டு வந்து சேர்த்தவர் ராணி விக்டோரியா. 1858-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட விக்டோரியா பிரகடனம்தான் பிரிட்டிஷ் ஆட்சி, நிர்வாகத்துக்குள் நம்மைக்கொண்டு போய்ச் சேர்த்தது.

அந்தப் பிரகடனத்தின் 20-வது பிரிவில் விக்டோரியா சில வார்த்தைகளை எழுதினார். விக்டோரியா என்ன எழுதி இருக்கிறார் என்பதை அலகாபாத் தர்பாரில் கானிங் பிரபு வாசித்தார்.

இப்படிச் சொன்னார் விக்டோரியா:

‘‘இந்தியாவின் வளமே நமது வலிமை!
அவர்களின் மனநிறைவே நமது பாதுகாப்பு!
அவர்களுடைய நன்றியே நமக்குச் சிறந்த பரிசு!”
- என்பது விக்டோரியாவின் வார்த்தைகள்!

திரும்பச் சொல்லிப் பாருங்கள்!

‘‘இந்தியாவின் வளமே நமது வலிமை!
அவர்களின் மனநிறைவே நமது பாதுகாப்பு!
அவர்களுடைய நன்றியே நமக்குச் சிறந்த பரிசு!”


இந்தியாவுக்கே வராத, இந்திய மூச்சுக் காற்றையே சுவாசிக்காத, இந்திய விசுவாசம் இல்லாத விக்டோரியா பேசினார் நாட்டின் வளத்தைப் பற்றி. நாட்டு மக்களின் மனநிறைவைப் பற்றி. நாட்டு மக்கள் காட்டும் நன்றியின் மதிப்பைப் பற்றி.

இன்று நம்மை ஆளும், ஆளத்துடிக்கும் விக்டோரியாக்களும் கானிங் பிரபுக்களும் இப்படி நினைக்கிறார்களா? உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நினைக்க வேண்டாம். ஒப்புக்காவது, நடிப்புக்காவது இப்படி நடந்து கொள்கிறார்களா? நடந்து கொள்வதைப்போல காட்டிக் கொள்கிறார்களா?

ஏன் அவர்கள் அப்படி இல்லை? வானத்தில் இருந்து குதித்தவர்களா இவர்கள்? இல்லை. பூமியில் பிறந்தவர்கள்தான் நம்முடைய அரசியல் தலைவர்கள். ஆனால், தேம்ஸ் நதிக்கரையின் தெய்வங்களாகத் தங்களைத் தாங்களே மகுடம் கட்டிக்கொண்டு இருப்பது எப்படி சாத்தியம் ஆயிற்று? இவர்கள்தான் உங்களிடம் வந்து வாக்குகளைக் கேட்கிறார்கள். முதலமைச்சர் ஆக்குங்கள் என்று.

இந்த முதலமைச்சர் நாற்காலிக்காக எல்லாக் குட்டிக்கரணங்களையும் 5 வாரங்களுக்குப் போடுவார்கள். ஐந்து ஆண்டுகள் காணாமல் போவார்கள். இதை நம்ப நாம் ஐந்தறிவு ஜந்துக்கள் அல்ல.

‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப்
பொழுதுபோக்கும் சிறிய கதை
நமக்கெல்லாம் உயிரின் வாதை’
- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மக்களின் உயிர் வதைபடுகிறது. ஆனால், ஒவ்வோர் தலைவரும், ஒவ்வொரு கட்சியும் தங்களால் முடிந்த அளவுக்குச் சிரம் அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அளவுகள் வித்தியாசப்படலாம். ஆனால் அளவீடுகள், மதிப்பீடுகளில் வித்தியாசம் இல்லை. இன்னும் சில நாட்களில் தேர்தல் வரப்போகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் சேர்ந்தவர்களின் மண்டையை உடைக்கிறது ஜெயலலிதா போலீஸ். சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து மண்டையை உடைத்தது கருணாநிதி போலீஸ். குண்டாந்தடிகள் ஒன்றுதான். ஆட்கள்தான் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது ஆட்சி மாற்றமா... காட்சி மாற்றமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்