வின்னர்?

234 தொகுதிகள் மெகா ரிசல்ட்!ஓவியங்கள்: ராஜா

க்னி நட்சத்திர வெயிலில் தமிழகம் தகிக்கிறதா அல்லது அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியில் தமிழகம் தவிக்கிறதா என்றால், தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது கேள்வியை டிக் செய்வார்கள். ஏனென்றால், பருவகாலத் தட்பவெப்பம் மாதந்தோறும் மாறும். ஆனால், இரண்டாவது கேள்விக்கான விடையில் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது.

வின்னர் யார்... சி.எம். யார்... அடுத்து ஆளப்போவது யார்? என்று யார் எந்த மாதிரியாகக் கேட்டாலும் ஜெயலலிதாவா, கருணாநிதியா, விஜயகாந்த்தா, அன்புமணியா (பி.ஜே.பி., நாம் தமிழர் கட்சி போன்ற பிற கூட்டணிகள் தங்களது முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.) என்ற பளிச் கேள்வியே அனைவர் மனதிலும் பட்டென்று வரும். ஆம்! அடுத்து யார்?

19-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போதுதான் லட்சக்கணக்கான மக்களின் மனப்போக்கு என்ன என்பது தெரியும். அதற்கு முன் தமிழகத்தின் அரசியல் போக்கு என்ன என்பதை எக்ஸ்ரே பார்வையுடன் எடுத்து வழங்க ஜூனியர் விகடன் திட்டமிட்டது. நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் மக்களின் மனம் அறிந்து அதனை முன்கூட்டியே வழங்குவதில் ஜூ.வி. பின்வாங்கியது இல்லை. இந்தத் தேர்தலிலும் அதே தீவிர முயற்சியில் ஜூ.வி. இறங்கியது.

234 தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார் என்ற மிகமிக நுணுக்கமான கேள்வியில் இருந்து தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற விரிவான கேள்வி வரை அனைத்தையும் வாசகர்களிடம் இருந்து பெறுவதற்கு முயற்சித்தோம். இந்தக் கருத்துக்கணிப்பில் விகடன் நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 110 பேர் தமிழகம் முழுக்க களத்தில் இறங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்