"என்னய்யா ஜெயிச்சுடுவோமா?"

கலாய்த்த கருணாநிதி

தேர்தல் தினமான மே 16-ம் தேதி தலைநகர் சென்னையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

ஜெ. பிரகாசமான சிரிப்பு எங்கே?     

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடி: “இன்றைக்கு நல்ல நேரம் எப்போ?” என்று ஆங்கில சேனல் ஒன்றின் பெண் நிருபர் ஒருவர், சக பத்திரிகையாளர்களிடம் கேட்டார். “திங்கள் கிழமை என்பதால் காலை 7.30 மணி முதல்  9.00 மணி வரை ராகுகாலம். அதனால், அதற்குப் பிறகுதான் ஜெயலலிதா வருவார்” என்று இன்னொரு நிருபர் சொன்னார். 9.55-க்கு சசிகலாவுடன் ஜெயலலிதா அங்கு வந்தார். இருவரும் பச்சை நிற சேலை உடுத்தி இருந்தனர். ஆனால், ஜெ. முகத்தில் உற்சாகம் மிஸ்ஸிங். வாக்குச்சாவடி வாசலுக்கே வந்து நின்றது அவரது கார். அந்த இடத்தில் இருந்து வாக்குச்சாவடி வரை பெஞ்ச் போடப்பட்டு இருந்தது. காரில் இருந்து இறங்கிய ஜெயலலிதா, அந்த பெஞ்ச்-ஐ ஒட்டியவாறு நடந்துசென்றார். வழக்கமாக, வாக்களித்து விட்டு வெளியே வந்து மை வைத்த விரலை ஊடகவியலாளர்களிடம் காண்பிக்கும் ஜெயலலிதா, இந்த முறை அப்படிக் காண்பிக்கவில்லை. அவரிடம் நிருபர்கள், “மேம்...  ஒரு  கேள்வி” என்று சத்தமிட, பேட்டி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று சற்று நேரம் யோசித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் இருந்து சற்று தொலைவில் நின்றவாறு, “இவ்வளவு காலம் பொறுத்து விட்டீர்கள்.  மக்களின் தீர்ப்பு இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்” என்று கூறிவிட்டுச் சென்றார். ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும்போது, வழக்கமாக ஜெ. முகத்தில் புன்னகை தவழும் இந்த முறை ஏனோ மிஸ்ஸிங்.  

“என்னய்யா ஜெயிச்சுடுவோமா?”  

தி.மு.க தலைவர் கருணாநிதி தன் குடும்பத்தினருடன் கோபாலபுரம் சாரதா நடுநிலைப்பள்ளியில் வாக்களிப்பது வழக்கம். இந்த முறை காலை 7.20-க்கு வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர், 7.22-க்கு வாக்களித்த கருணாநிதி, “தி.மு.க-வின் வெற்றிவாய்ப்புப் பிரகாசமாக உள்ளது” என்று நிருபர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு, “என்னய்யா... ஜெயிச்சுடுவோமா?” என்று அருகில் இருந்த ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளரான கு.க.செல்வத்தை கலாய்ப்பது போல கேட்டார்.

மூத்த அரசியல் தலைவரின் வாக்கு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்