"ரெட்டை இலைக்கு போடும்மா!"

சொன்னாரா அழகிரி?

மு.க.ஸ்டாலின் முகாமுக்கு வேட்டு வைக்கும் விதமாக, தேர்தலுக்கு முந்தைய நாள் தனது முகநூல் பக்கத்தின் முகப்பில் ‘இரட்டை இலை’ படத்தைப் பதிவிட்டு தி.மு.க கோட்டையை அலறவைத்தார், மு.க.அழகிரி என்று செய்தி பரவியது.

இறுதி நேரத்தில் சிக்கல் ஏற்படுத்துவார் அழகிரி என்று எதிர்பார்க்கப்பட்டதால் அது அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. ஆனால், அது தனது அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் அல்ல என்று அழகிரி எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளார். 

என்னதான் நடக்கிறது என்று அழகிரி வட்டாரத்தில் கேட்டோம். “அழகிரி அண்ணனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். கட்சியிலும், குடும்பத்திலும் அழகிரியை ஒதுக்கி வருகிறார்கள். இதனால், சமீபகாலமாக அழகிரி மிகவும் துயரத்தில் இருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் கையில் கட்சி இல்லை. அது, தி.மு.க-வே இல்லை... ச.தி.மு.க. அதாவது, சபரீசன் தி.மு.க-வாக மாறி விட்டது. வேட்பாளர் தேர்வு முதல் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் வரை அனைத்துமே சபரீசன்தான். இதைத் தலைவரிடம் அழகிரி, ‘யாரிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றினீர்களோ, அவர்களிடமே இப்போது கட்சி போய்விட்டது’ என்று வருத்தப்பட்டார். அதற்கு, கருணாநிதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

அதற்கு பிறகு மதுரைக்கு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு வந்து இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்ட கருணாநிதி, அழகிரியையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்கவில்லை. ஸ்டாலின் தரப்பில் இருந்து அழகிரியை கருணாநிதியிடம் நெருங்க விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக முக்கியமான நபர்களிடம் பேசிய அழகிரி, ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத ரத்தினவேலு, ஜலீல் ஆகியோருக்கு சீட்டு கொடுத்தனர். அதைப்போல, மதுரை உள்பட பல இடங்களிலும் தி.மு.க-வுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு சீட் கொடுத்துள்ளனர்” என்று அழகிரி ஆதங்கப்பட்டுள்ளார். பின்னர்,‘‘மதுரையில் 10 தொகுதிகளிலும் தி.மு.க தோற்கும்” என்றாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்