பொழிந்தது பணமழை... தள்ளிபோச்சு தேர்தல்

அரவக்குறிச்சி...தஞ்சாவூர்இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக...

ணம், மலை அளவு குவிந்து இருந்தது மட்டுமல்ல, பண மழை பொழிந்த தொகுதிகளாக அரவக்குறிச்சியும் தஞ்சாவூரும் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இரு தொகுதிகளிலும் அதிக அளவுக்குப் பணப் பட்டுவாடா நடந்திருப்பதாக, தேர்தல் ஆணையத்துக்கு ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக மற்ற தொகுதிகளில் பண நடமாட்டம் இல்லையா என்று கேட்கக் கூடாது.

கரூர்... பணவூர்!

அரவக்குறிச்சியில் பண நடமாட்டம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால். அன்புநாதன் வீட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும்தான் இந்திய அளவில் புகழ் பெற்றது கரூர்.

கடந்த ஏப்ரல்  22-ம் தேதி, கரூர் எஸ்.பி வந்திதா பாண்டே, மற்றும் தேர்தல் பறக்கும் படையினர்.  வருமான வரித்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து அன்புநாதனின் அய்யம்பாளையம் குடோன்,  பண்ணை வீடு என ரெய்டு நடத்தினர். சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 200 வேட்டி, சேலைகளும், சில ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷின்களும், பதிவு செய்யப்படாத ஆம்புலன்ஸும் கைப்பற்றப்பட்டன. ஆனால், உண்மையான தொகையைச் சொல்லாமல் அதிகாரிகள் மறைக்கிறார்கள் என சர்ச்சை கிளம்பி, இந்தப் பிரச்னையில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் டெல்லி வரை புகாரைக் கொண்டு சென்றனர்.

அன்புநாதன் வீட்டுக்குள் ரெய்டு நடத்திய எஸ்.பி வந்திதா பாண்டேவை உயர் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு நெருங்கிய சகாவாக இருந்துள்ளார் அன்புநாதன். சோதனை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்புக்கு இருந்த போலீஸாருக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டில் இருந்து ஹாயாக கிளம்பிப்போன அன்புநாதன், இப்போதுவரை வீடு திரும்பவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. காவல் துறையும் சீரியஸாக தேடவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் அவரது வீட்டுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் வழங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்