"அசிங்கப்படுத்தனும்னு நெனைக்கிறாங்க!"

சீண்டியதால் மண்டை உடைப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் போட்டியிடுகிறார். கடந்த 12-ம் தேதி பள்ளத்தூர் என்ற இடத்தில் வேன் பிரசாரம் செய்த பெரிய கருப்பன், அ.தி.மு.க அரசை விமர்சித்துப் பேசினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அ.தி.மு.க-வின் ஜெ. பேரவை பொறுப்பாளர் ஆரியகண்ணன் என்பவர், “உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா? உன் வீடியோவைதான் உலகமே பார்க்கிறதே” என்று சொல்லியிருக்கிறார். அதனால், ஆத்திரம் அடைந்த தி.மு.க-வினர், ஆரியகண்ணனை தாக்கியுள்ளனர்.

அதைக் கண்டித்து, அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தகவல் அறிந்து, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பள்ளத்தூர் வந்தார். பள்ளத்தூர் - கொத்தேரி சாலையில் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் குவிந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் பெரியகருப்பன் இருந்துள்ளார். அந்த வீட்டை முற்றுகையிட அ.தி.மு.க-வினர் திட்டமிட்டனர். அப்போது, அங்கு திரண்ட தி.மு.க-வினர், அ.தி.மு.க-வினர் மீது கற்களை வீசியுள்ளனர். பதிலுக்கு அ.தி.மு.க-வினரும் திருப்பித் தாக்கியுள்ளனர்.

தி.மு.க-வினர் வீசிய கல் ஒன்று செந்தில்நாதனின் தலையில் பட்டது. அவருக்கு மண்டை உடைத்தது.  சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமியும் கட்டையால் தாக்கப்பட்டு இருக்கிறார். அ.தி.மு.க-வினரின் கார்களையும் தி.மு.க-வினர் தாக்க ஆரம்பித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்