அரசுப் பணியாளர்களா... ஆளும் கட்சி ஊழியர்களா?

சர்ச்சையில் செய்தித் துறையினர்

தேர்தல் விதிமீறல்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ‘வாக்காளர்களுக்கு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை தேர்தல் விதியை மீறி மீடியாக்களுக்கு அனுப்பி அ.தி.மு.க. விசுவாசத்தை காட்டியிருக்கிறது அரசின் செய்தித்துறை.

அரசின் செய்திகளை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அனுப்புவதற்கு செய்தித் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு அலுவலகம் தலைமைச் செயலகத்தில் இயங்கி வருகிறது. இவர்கள் மூலமாகத்தான் முதல்வரின் அறிக்கைள், பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முதல்வரின் செய்திகள் எதுவும் பத்திரிகைகளுக்கு அனுப்பப்படுவதில்லை. அப்படி அனுப்பவும் கூடாது.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரங்கள், அறிக்கைகள், படங்கள் அனைத்தும் அ.தி.மு.க தலைமை அலுவலகம் மூலமாகவே வெளியிடப்பட்டு வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான்  கடந்த 14-ம் தேதி அ.தி.மு.க-வுக்கு பொதுமக்கள் ஓட்டுபோட வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘வாக்காளர்களுக்கு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் இ-மெயில் மூலம் இரண்டு முறை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமும் அந்த அறிக்கை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான் ஆச்சர்யம்.  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசின் செய்தித் துறை ஜெயலலிதாவின் அறிக்கையை மீடியாக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது அப்பட்டமான தேர்தல் விதிமீறல். செய்திதுறையின் DIPR PR SECTION பெயரில் ஜெயலலிதாவின் அறிக்கை அனைத்து பத்திரிகைகளுக்கும் மெயில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. Hon’ble Amma’s Arikai - Voters Appeal - MLA Election 2016 என்ற தலைப்பிட்டு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். இந்த விதிமீறலை தேர்தல் கமிஷன் கவனத்திற்குக் கொண்டு போன தி.மு.க, ‘அரசின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சொன்னது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்