கன்டெய்னர்களில் கரைபுரண்ட 570 கோடி ரூபாய்!

பர பர நிமிடங்கள்

டந்த 13-ம் தேதி... நள்ளிரவு சுமார் ஒரு மணி. திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே மூன்று இன்னோவா கார்களும், மூன்று கன்டெய்னர் லாரிகளும் சென்று கொண்டிருந்தன. அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள், அந்த வாகனங்களை மறித்தனர். காரில் இருந்தவர்கள் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திகொண்டு, அடையாள அட்டைகளைக் காட்டினர். அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்தன. ஆனால், யூனிஃபார்முக்குப் பதில் லுங்கி அணிந்து இருந்தனர். கன்டெய்னரில் பணம் இருப்பதாகவும், அதை வங்கிக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர். ஆனால், தேர்தல் அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்து, வேகமாகச் சென்று அந்த வாகனங்களை மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் இருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வங்கிக்கு, ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் 570 கோடி ரூபாயை எடுத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்களின் நகல்களையும் காட்டினர். அவர்களிடம், தேர்தல் அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பினர்.

570 கோடி ரூபாயை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்ல முடியுமா? இவ்வளவு பெரிய தொகை கோவையில் இருந்து ஏன் போகிறது? கன்டெய்னர்களின் கதவுகள் ஏன் சீலிடப்படவில்லை? போலீஸார் ஏன் யூனிஃபார்ம் அணியவில்லை? அசல் ஆவணங்கள் இல்லாமல் நகல் ஆவணங்களை வைத்திருந்தது ஏன்?... என பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். அவற்றுக்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை.

எனவே. மூன்று கன்டெய்னர்களில் இருந்த 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி அறிவித்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியோ, “570 கோடி ரூபாய் அல்ல. வெறும் 195 கோடி ரூபாய்தான் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களில் அப்படித்தான் உள்ளது” என்றார். பிறகு, ‘‘ஒரு கன்டெய்னரில் 190 கோடி. மூன்று கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது” என மாற்றிச் சொன்னார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்