மிஸ்டர் கழுகு: அதிகாரப் பசி... பாதாளம் வரை பாய்ந்த பணம்!

டது கை சுட்டு விரலைக் காட்டியபடியே அலுவலகத்துக்குள் வந்த கழுகார், மழையில் லேசாக நனைந்திருந்தார். ‘‘சூடு தணிந்தது’’ தேர்தல், வானிலை இரண்டையும் குறித்து சிலேடையாகச் சொன்னார்.

‘‘அடுத்த முறை நான் உம்மைச் சந்திக்கும்போது தேர்தல் முடிவுகள் தெரிந்து... ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எது என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். நியாயமான தேர்தல்... முழுமையான வாக்குப்பதிவு... மக்களைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம் இவை மூன்றுதான் நடுநிலையான மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள். முழுமையான வாக்குப்பதிவு நடந்ததா என்பது பின்னர்தான் தெரியும். ஆனால், காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்து வாக்குகளைப் பதிவுசெய்ததைப் பார்த்தால் பெருமைப்படும் இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று சொல்லலாம். ஆனால்...!”

‘‘என்ன ஆனால்..?”

‘‘தேர்தல் நேர்மையாக நடந்ததா என்றால்... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகாரப் பசிகொண்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீண்டும் பணத்தை அடைவதற்காகப் பணத்தைப் பாதாளம் வரைக்கும்  இறைத்தார்கள். தமிழ்நாட்டில் இந்தத் தொகுதி, அந்தத் தொகுதி என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் தொகுதிகளிலும் பணம் பாய்ந்தது. தேர்தல் கமிஷனால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்