"நமோ ஏஜென்சி?"

மாலேகான் குண்டுவெடிப்பு மர்மங்கள்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் அந்த வழக்கில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். அங்கு, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ரம்ஜான் அன்று இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். அந்தச் சம்பவம் குறித்து புலனாய்வு செய்த மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ‘பயங்கரவாத எதிர்ப்புப் படை’ வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சிக்குரியவை.

சாத்வி பிரக்யா, ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், சுதாகர் திவிவேதி என்ற தயானந்த் பாண்டே, ராகேஷ் தவாதே, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, ஷிவநாராயண் கல்சங்ரா, ஷியாம் சாஹு, மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அஜய் ரஹிகார் மற்றும் ஜகதீஷ் மத்ரா என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கு ‘மாஸ்டர் மைண்ட்’ ஆக செயல்பட்டவர் என்று கருதப்பட்ட சுவாமி அசிமானந்தா தலைமறைவானார். இவர்கள், ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

“பயங்கரவாதத்தை பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமாக எதிர்கொண்டு, ‘இந்து ராஜ்ஜியம்’ ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அபினவ் பாரத். சாத்வி பிரக்யா, வி.ஹெச்.பி அமைப்பின் முன்னாள் உறுப்பினர், ஏ.பி.வி.பி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் செயல்பட்டவர்” என்று பயங்கரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். காந்த் பிரசாத் புரோஹித் என்பவர், இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்ற செய்தி அனைவரையும் அதிரவைத்தது. குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், சாத்வி பிரக்யாவுக்குச் சொந்தமானது. அதை வைத்துத்தான் பிரக்யாவை கைது செய்தனர். பிரக்யாவை கைது செய்தபிறகுதான், இந்த வழக்கில் பல உண்மைகளை அறிந்துகொள்ள முடிந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் அப்போது சொன்னார்கள்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ‘மகாராஷ்ட்ர திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டம்’ மிகவும் கடுமையானது. அந்தச் சட்டத்தின் கீழ், மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து, 4,528 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை 2010-ம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பல மணி நேரத் தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய பிரக்யா, “ஏன் கொஞ்சப் பேர்தான் செத்தார்கள்? நீ ஏன் கூட்டம் நிறைந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை?” என்று கேட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்