‘‘அவர் கழுத்தை பிடித்துக்கொண்டார்... நான் காலை பிடித்துக்கொண்டேன்!’’

பகீர் கிளப்பும் 2ஜி

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா கைதாகி திகார் சிறையில் இருந்த நேரம். 16.03.2011... அன்று அலைக்கற்றைபோலவே கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் உயிர்.

கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அதிபராக இருந்த சாதிக் பாட்சா, 2ஜி ஊழல் வழக்கு விவகாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட நபர். சி.பி.ஐ., அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு​வந்தது.

இந்தோனேஷியா, மொரீஷியஸ், சிஷெல்ஸ் உட்பட சில நாடுகளில் ஸ்பெக்ட்ரம் பணம் முதலீடு செய்யப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ கண்டுபிடித்தது. அந்த நாட்டு அரசுகளுக்கு மேலும் விவரம் தரும்படி அமலாக்கத் துறை மூலம் கடிதங்கள் போயின. இதுபோக, இந்தியாவில் சுமார் ரூ.800 கோடி மதிப்பில் சாதிக் பெயரில் இருந்த சில சொத்துக்களின் விவரங்களையும் தோண்டி எடுத்த சி.பி.ஐ., அதுகுறித்து அடுக்கடுக்கான கேள்விகளுடன் விசாரணைக்கு நாள் குறித்துக் காத்திருந்தது. ‘இனி தப்பிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட சாதிக் பாட்சா, அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளைக் கக்கும் மனநிலைக்கு வந்திருந்தார்...’ என்று பலமான பேச்சு அடிபட்டது. அப்ரூவர் ஆகலாம் என்று செய்தி கசிந்ததுமே, பல்வேறு மட்டங்களில் இருந்தும் சாதிக் பாட்சாவுக்கு மறைமுக மிரட்டல்கள் வந்தனவாம். இதனால் மேலும் பயந்துபோன சாதிக், எங்கும் வெளியில் தலைகாட்டாமல், இரண்டு வாரங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்