இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சென்னைவாழ் ஜனங்களுக்கு, வணக்கம்.

உங்களுக்கு அன்னா ஜேக்கப் தெரியுமா? அவர் நாடுபோற்றும் மிகப் பெரிய தலைவரோ, நடிகரோ, பிரபலமோ அல்ல... தன் வாழ்க்கை முழுக்க வேலூர் சி.எம்.சி-யில் செவிலியராகத் தொண்டாற்றியவர். இப்போது அன்னா ஜேக்கப்புக்கு வயது 103. தேர்தல் நடந்த மே 16-ம் நாள் அவர் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிற்கவும்கூட முடியாதவர், தன்னைப் பரிசோதித்துக்கொண்டிருந்த மருத்துவரை அழைத்து,  ‘‘திஸ் ஈஸ் மை ட்யூட்டி... ஐ மஸ்ட் வோட்’’ என்று கூறினார். எப்படியாவது தன்னை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். மருத்துவர் உதவ, வாக்குச்சாவடிக்குச் சென்று தன் வாக்கினை பதிவுசெய்திருக்கிறார் அன்னா ஜேக்கப். செம சூப்பர் இல்லையா?

103 வயதாகும் அன்னா ஜேக்கப் இதுவரை ஒரு தேர்தலில்கூட தன்னுடைய வாக்கைப் பதிவுசெய்யாமல் இருந்ததில்லை. அவருக்கும் எல்லோரையும்போல நிறையவே அரசியல் அதிருப்திகளும் கோபங்களும் உண்டுதான். மற்ற எல்லோரையும்போல கமிட்மென்ட்களும் பிஸியான வேலைகளும் இருக்கிறதுதான். ஆனால், அவர் தன் வாக்கைப் பதிவுசெய்யாமல் இருந்ததேயில்லை. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ருக்மணி அம்மாளுக்கு வயது 99. அவரும் ஒரு பெருமைமிகு வாக்காளர்தான். பான்யான் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் பற்றித் தெரியுமா? மனநல பிரச்னை உள்ளவர்களுக்காகவும், வீட்டினரால் கைவிடப்பட்ட முதியோர்களுக்காகவும் காப்பு இல்லங்களை நடத்துகிற அமைப்பு. இந்த அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிற 88 பேர் இந்த முறை வாக்களித்துள்ளனர். இந்த முதியோர்கள் யாருமற்றவர்களாக இருந்தபோதும் தன் சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாக இருந்தும் இந்தச் சமூகத்துக்காக, அதன் மேம்பாட்டுக்காகத் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

இந்தத் தேர்தல் வைபவத்தை ஒட்டி ஃபேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று சுற்றி வருகிறது. தன் இரண்டு கைகளும் இல்லாத ஒருவர், வாக்களித்துவிட்டு தன் கால் விரல்களில் மையிட்டுக்கொள்கிற அந்தப் புகைப்படம், நிறைய விஷயங்களை நம் செவுளில் அடித்துச் சொல்கிறது.
தேர்தலுக்கு முந்தைய தினம் கோயம்பேடு பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பேருந்துகளில் அத்தனை நெரிசலில் சிக்கிக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தனர். அதில் முக்கால்வாசி பேர் சாதாரண எளிய வேலைகள் பார்க்கிற கூலிகள். அதிகம் படித்திராதவர்கள். ‘‘நம்ம வாக்கை நாம நிச்சயமா செலுத்த ணும்ண்ணே... அது நம்மோட ஜனநாயக கடமைண்ணே’’ என்றார் ஒரு முனியாண்டி விலாஸ் உழைப்பாளி. இந்த உழைப்பாளிகள் தங்களுக்கு கிடைத்த ஒருநாளில் நன்றாக ஓய்வெடுக்கலாம், ஓயாமல் டி.வி பார்க்கலாம், தன் பிள்ளை குட்டிகளோடு நேரம் செலவழிக்கலாம்... இருந்தும் இத்தனைக் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டும் நிற்கவும்கூட இடமில்லாமல் ஏன் வாக்களிக்கச் செல்கிறார்கள். வாக்களிப்பதைத் தங்களுடைய இன்றியமையாத கட்டாயம் செய்தே தீரவேண்டிய விஷயம் என்று கருதுவதால்தான். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய குரலை, வலியை, கோபத்தை அழுத்தமாகப் பதிவு செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுவதால்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்