அரவக்குறிச்சியில் கெடுபிடி - அனல்பறக்கும் பிரசாரம்!

தலபாதாளம் வரைக்கும் பணம் பாய்ந்ததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில், கடும் கெடுபிடிகளுடன் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

அரவக்குறிச்சி தொகுதியில் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகத் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர் களுக்குப் பணப் பட்டுவாடா நடந்தது குறித்தும், அதிக அளவுக்கு பணப் புழக்கம் உள்ளது குறித்தும் விசாரிப்பதற்கு பொதுப் பார்வையாளர், செலவினப் பார்வையாளர், போலீஸ் பார்வையாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு 19-ம் தேதி மாலை நான்கு மணிக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்