கிராமத்து ஜனமும்... இரட்டை இலை மணமும்!

அ.தி.மு.க-வை வெற்றி பெறவைத்த ஐந்து காரணங்கள்!

ரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துள்ளார் ஜெயலலிதா. அவரது அரசியல் வாழ்க்கையில் இது மாபெரும் சாதனை.

எம்.ஜி.ஆர் காலத்தில்தான் அ.தி.மு.க தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை செய்தது.  இப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி சாத்தியமானது எப்படி?

அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி!

1996-ம் ஆண்டு தேர்தலில் படுதோல்விக்குப் பின்னர், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் 51.1 சதவிகித வாக்குகளைப் பெற்று 132 இடங்களைப் பிடித்தது. 2006 தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தபோதிலும், 40 சதவிகித ஓட்டுக்களை தக்கவைத்தது. 61 இடங்களைப் பிடித்தது. 2011 தேர்தலில் அ.தி.மு.க 54.06 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 40 சதவிகிதம் வரை அ.தி.மு.க-வுக்கு என இருக்கும் நிலையான வாக்குகளும், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப 10 சதவிகிதம் அளவுக்கு வாக்குகளை அதிகம் பெறும்போதும் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றுகிறது. நிலையாக இருக்கும் வாக்கு வங்கி சிதறாமல் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்ததுதான் இந்த முறை வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்