தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட்டதா?

தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், நேர்மையாக நடந்ததா? பணம் தண்ணீராய் பாய்ந்தது. சில இடங்களில் மட்டுமே பறிக்கப்பட்டது. பல இடங்களில் தேர்தல் ஆணையத்தாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. இதையே கேள்வியாக முன்வைத்தோம். அதற்கு கிடைத்த விடைகள் இங்கே...

‘‘கட்சிகளிடம், வாக்காளர்களிடம் நேர்மை இல்லை!”

என்.கோபால்சாமி (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்): ‘‘தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாகவே நடத்தியது. ஆனால், அரசியல் கட்சியினரும் வாக்காளர்களும் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. இவர்கள் இருவரும் மாறாதபோது, தேர்தல் நேர்மையாக நடைபெறுவது சாத்தியம் இல்லை. ஐந்தரை கோடி வாக்காளர்களுக்கு, பல கட்சிகளைச் சேர்ந்த 50 லட்சம் பேர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்தால், இதைத் தடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் காலத்தில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்குக் கறுப்புப் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். அந்தப் பணத்தில் இருந்து எடுத்துத் தேர்தலில் செலவிடுகிறார்கள். மீண்டும் அந்தப் பணத்தை எடுத்துவிடலாம் என்று நம்புகிறார்கள். தேர்தல் என்பதை ஒரு லாட்டரி சீட்டுபோல அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். அதனால்தான், மற்ற மாநிலங்களைவிட வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது. தேர்தல் ஆணையம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க இந்த அளவுக்கு செலவு செய்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டு போடுபவர்கள் கடைசி நேரத்தில்தான் அவர்கள் வாக்களிப்பதைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். இவ்வளவு செய்தும் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலைவிட 4 சதவிகிதம் குறைவாகத்தான் வாக்குகள் பதிவாகி உள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி அனைவரும் வாக்களிக்கக் கூடிய விதத்தில் எளிதான முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்