உங்களுக்கு எவ்வளவு துட்டு? போடுங்கய்யா ஓட்டு!

தஞ்சை தேர்தல் தள்ளிவைப்பின் பின்னணி!

னிவரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால், ‘தேர்தலைத் தள்ளிவைப்போம், ரத்து செய்வோம்’ என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தேர்தல் ஆணையம். விடிந்தால் தேர்தல். அதற்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குத் தேர்தல் ஆணையம், தஞ்சை தொகுதியில் தேர்தல் தள்ளிவைப்பு என்ற செய்தியை வெளியிட்டது. தேர்தலைத் தள்ளிவைத்திருப்பது பொதுமக்களிடையே பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்து லாட்ஜில் ரூ.20 லட்சம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் இருந்து சரவணன் என்பவர் எடுத்துச்சென்ற ரூ.30 ஆயிரம், வார்டு கவுன்சிலர்களுக்கு, வார்டு செயலாளர்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லி எழுதப்பட்டிருந்த ரூ.1 கோடியே 40 லட்சம் பணப் பட்டுவாடா பட்டியல் என இவை எல்லாம் அதிகாரிகள் சோதனையில் பிடிபட்டன. இதுதவிர 30, 31, 39 ஆகிய வார்டு கவுன்சிலர்களின் வீடுகளில் சோதனையிட்டு உள்ளனர். 28-வது வார்டு தேர்தல் அலுவலகத்தில் உள்ளே புகுந்தும் பறக்கும் படையினர் சோதனையிட்டு உள்ளனர். கார், பைக் என அனைத்திலும் சல்லடை போட்டு சலித்துள்ளனர். இந்த சோதனைகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் தேர்தலைத் தள்ளி வைத்திருக்கிறது என்கிறார்கள்.

அ.தி.மு.க-வினர், ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்களுக்கு ரூ.500 வீதம் 9 கோடி ரூபாயும், தி.மு.க-வினர், நகர மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்கு 75 ஆயிரம் வாக்காளர்களுக்கு ரூ.200, ரூ.300 வீதமும் பணம் விநியோகம் செய்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்