மிஸ்டர் கழுகு: ‘ஜெய’மயம்! - ஒன் உமன் ஆர்மி...

ழுகாருக்கு போன் செய்தபோது பட்டாசு சத்தம் அதிகமாகக் கேட்டது. போயஸ் கார்டனில் இருக்கிறார் என்று புரிந்தது. ‘‘கார்டன் கதவுகள் திறக்கப்பட்டு ஜெயலலிதா வெளியில் வருகிறாரா என்று பார்த்துவிட்டு மதியம் 1 மணிக்கு மேல் வருகிறேன்” என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிய கழுகார், சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்து சேர்ந்தார்.

‘‘ஜெயலலிதாவே எதிர்பார்க்காத வெற்றி இது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஜெயலலிதா முகத்தில் வெற்றிப் பெருமிதம் இல்லை. ‘234 தொகுதிகளிலும் வென்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்லவில்லை அவர். ‘அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ‘இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து இருந்தால் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும்’ என்று மிகச் சாதாரணமான வார்த்தைகளில்தான் ஜெயலலிதா சொன்னார். ஏனென்றால், அசுர பலத்துடன் அ.தி.மு.க வெல்லும் என்று அவருக்கே தகவல்கள் வரவில்லை. மாநில உளவுத்துறை அதிகாரி ஒருவர், ‘120 தொகுதிகளை ரீச் செய்துவிடுவோம்’ என்றுதான் சொல்லி வந்தார். ஆனால், ஜெயலலிதா எதிர்பார்த்தது, 180 தொகுதிகளுக்கு மேல்!”

‘‘அப்படியா?”

‘‘ஆமாம். ‘நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 39-க்கு 37 ஜெயித்தது மாதிரி, இந்தத் தேர்தலில் 234-ல் 180 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லிவந்த ஜெயலலிதா, கருணாநிதியுடன் விஜயகாந்த் கைகோக்கவில்லை என்றதும் நிச்சயம் இந்த இலக்கை எட்டிவிடுவோம் என்று நினைத்தார். அ.தி.மு.க எதிர்ப்பு வாக்கு வங்கியை உடைத்ததால், வெற்றி எளிமையாகக் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், அ.தி.மு.க-வைத் தொடர்ச்சியாக விரட்டிக்கொண்டு தி.மு.க வரும் என்று ஜெயலலிதா நினைத்திருக்க மாட்டார்.”

‘‘கடுமையான போட்டிதான்.”

‘‘எம்.ஜி.ஆர் காலத்தில்கூட, அ.தி.மு.க 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் தனித்துப் போட்டியிட்டது இல்லை. ஜெயலலிதாதான் தைரியமாகத் தனித்துப் போட்டியிட்டார். தன்னோடு முக்கியக் கட்சிகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இவரால் முன்பைப்போல தொடர்ச்சியாகச் சூறாவளிப் பிரசாரம் செய்ய முடியவில்லை. அதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. முக்கிய நகரங்களில் மட்டும் அவர் பேசினார். அவரைவிட பலமான பிரசாரம் செய்ய யாரும் இல்லை. எனவேதான் ஒருவிதமான கலக்கம் அவருக்கு இருந்தது. காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அறிவாலயமும், அ.தி.மு.க தலைமைக் கழகமும் பரபரப்பாகின. கோபாலபுரமும் போயஸ் கார்டனும் இனம்புரியாத ஆர்வத்தில் தவிக்கத் தொடங்கின. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ணத் தொடங்கியதும், ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு என்று வந்தது. தி.மு.க கூடாரங்களில் புன்சிரிப்பு மலர்ந்தது.”

‘‘மந்திரி தொகுதியிலேயே பின்னடைவுதான் காரணம்!”

‘‘கோபாலபுரத்தில் கருணாநிதி உற்சாகமானார். அ.தி.மு.க-வினர் ஒன்றும் சொல்லவில்லை. விறுவிறுவென முன்னேறிய தி.மு.க 10 மணியளவில் 50 இடங்களில் முன்னிலை பெற்றது. அப்போது அ.தி.மு.க 41 இடங்கள் என்று பின்தங்கி இருந்தாலும், போட்டி கடுமையாக இருந்தது. தி.மு.க-வினர் கொண்டாட்டத்துக்குத் தயாராகும் மனநிலையில் இருந்தபோது, அ.தி.மு.க-வினர் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். முன்னிலை நிலவரம், தி.மு.க 78 என இருந்தபோது அதை நெருக்கிக்கொண்டே வந்த அ.தி.மு.க., 70 இடங்களில் இருந்தது. அதன்பிறகு, சரசரவென முன்னேறிய அ.தி.மு.க-வின் முன்னிலை நிலவரம், இரு மடங்காகப் பெருகி 141 இடங்களில் போய் நின்றது. அந்தநேரத்தில், தி.மு.க 71 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த், பென்னாகரத்தில் அன்புமணி, காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் தொடர்ந்து பின்தங்கி இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்