தி.மு.க-வுக்கு மாற்று அ.தி.மு.க... அ.தி.மு.க-வுக்கு மாற்று தி.மு.க.!

மக்கள் தீர்ப்பு!

தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் உடன்பாடு மட்டும்தான். தேர்தலில் வென்ற கூட்டணி திராவிட அணிதான் என்பதை இன்னொரு முறை உரக்கச் சொல்லியிருக்கிறது தேர்தல் முடிவுகள்.

இருக்கும் தொகுதிகளை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் பங்கு வைத்துக்கொண்டன. இவற்றை எதிர்த்து நின்ற தமிழகத்தின் மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ‘பெப்பே’ காட்டியிருக்கிறது தேர்தல் முடிவுகள்.

தேர்தல் பிரசாரம் தொடங்கியதுமே ஒரே ஒரு முழக்கம்தான் தமிழக மைக்குகளின் முன் உச்சரிக்கப்பட்டது. ‘திராவிட’ என்ற வார்த்தை திராவிடக் கட்சிகளைத் தவிர, மற்றக் கட்சிகளின் பிரசாரங்களில்தான் அதிகமாக எதிரொலித்தது.

‘‘திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும்!’’

பிரேமலதா முதல் பிரதமர் மோடி வரை... அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல் உள்ளூர் சாதிக் கட்சிகள் வரை...  ‘நாம் தமிழர்’ சீமான் முதல் லெட்டர் பேட்  கட்சிகள் வரை... ஒரே முழக்கத்தை முன்னெடுத்தார்கள். ‘திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். திராவிடக் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள். திராவிட ஆட்சிக்கு மாற்று உருவாகிவிட்டது’ என்பவைதான் முக்கிய கோஷங்களாக இருந்தன. தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைவிட, மக்கள் அப்படி ஒரு மாற்றத்தை விரும்புகிறார்களா என்பதுதான் மத்திய உளவுத்துறைக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் பிரிந்து சென்றபோதும், வைகோ பிரிந்து சென்றபோதும் ஜா. அணி, ஜெ. அணி என உடைந்தபோதும் விஜயகாந்த் வீறுகொண்டு எழுந்தபோதும் அது பலிக்கவே இல்லை என்பதுதான் காலம் சொன்ன பாடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்