மாற்றமும் இல்லை... முன்னேற்றமும் இல்லை!

மிழகத்தில் மாற்று அரசியலுக்கான இடம், மதுவிலக்குக் கொள்கை, தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் செல்வாக்கு எனப் பல பரிமாணங்களை உணர்த்தி இருக்கும் 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ம.க-வின் செல்வாக்கு என்ன என்பதையும் திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. 

‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற கோஷத்தை முன்வைத்து, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அன்புமணியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று பா.ம.க துடித்தது. 2014-நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அன்புமணி பா.ம.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததுமே, தங்களுக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் போய், கட்சிக்காரர்களை ஒருங்கிணைக்கும் வேலையை அன்புமணி தொடங்கி இருந்தார். பா.ம.க-வின் பணிகள் மெல்ல மெல்ல வேகம் பிடித்தன. தமிழகம் முழுவதும் ‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற போஸ்டர் ஒட்டி, அன்புமணி பற்றி அனைவரை யும் பேசவைத்ததில் எக்ஸ்பிரஸ் வேகம் பிடித்தது. அந்த வேகத்தில், ‘முதற்கட்ட தேர்தல் அறிக்கை’ ஒன்றையும் வெளி யிட்டு அதைப் பிரசாரமாக்கியதில், ஜெட் வேகத்தை எட்டியது பா.ம.க.

கோடிகளைச் செலவழித்து, வருடக்கணக்கில் பிரசாரம் செய்து, முதல்வர் கனவில் இருந்த பா.ம.க-வுக்கு பலன் கிடைத்ததா?

தி.மு.க. - அ.தி.மு.க-வோடு மாறி மாறி கூட்டணி வைத்துப் போட்டியிட்டபோது, தொடர்ச்சியாக 5 சதவிகித ஓட்டுக்களை பா.ம.க பெற்றது. 1991-ல் 5.89; 1996-ல் 3.84; 2001-ல் 5.56; 2006-ல் 5.65, 2016-ல் 5.3 சதவிகிதம். ஆக, 1996-ம் ஆண்டுத் தேர்தலைத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் 5 சதவிகித வாக்குகளை பா.ம.க பெற்றுள்ளது. அதை இந்தத் தேர்தலிலும் உறுதி செய்துள்ளது. ஒரே வித்தியாசம், பல தேர்தல்களுக்குப்பிறகு இந்தத் தேர்தலில் அவர்கள் தனித்துப் போட்டியிட்டு, இந்த வாக்கு வாங்கியைப் பெற்றுள்ளனர். பா.ம.க முன்வைத்த மாற்றம்... முன்னேற்றம்... என்ற மாற்று அரசியலுக்கு வட மாவட்டங்களில் எந்த வரவேற்பும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்