வீழ்த்தப்பட்ட வி.ஐ.பி-க்கள் - நடந்தது என்ன?

மாற்று அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்று வசனம் பேசிய அன்புமணி, ‘தமிழன் வாக்கு தமிழனுக்கே’ என்று முழங்கிய சீமான்... என நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்விய வி.ஐ.பி-க்களின் பட்டியல் சற்று நீளமானதுதான்.

விளம்பரம் பலிக்கவில்லை!


‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற போஸ்டர்கள், நாளிதழ்களில் விளம்பரங்கள் என வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி.

முதல்நாள் முதல் கையெழுத்து.. ஏழாம் நாள் சிப்காட் கையெழுத்து என்று ஹைடெக் மேடையில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தம்மை முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிடும் என்று நம்பிய அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரனிடம் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். வெற்றி நமக்குத்தான் என்ற நினைப்பில் பிரசாரத்துக்கு அதிகம் வரவில்லை. அதைத் தனக்கு சாதகமாக இன்பசேகரன் மாற்றிக்கொண்டார். ‘பா.ம.க-வின் அன்புமணியும், அ.தி.மு.க-வின் கே.பி.முனுசாமியும் வெளியூர்க்காரர்கள். இன்பசேகரனின் மண்ணின் மைந்தன் சென்டிமென்ட் மக்களிடம் எடுபட்டுவிட்டது. மேலும், பெங்களூரில் தங்கி வேலைசெய்யும் பென்னாகரம் வாக்காளர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்து ஓட்டுபோட வைத்தார் இன்பசேகரன். போஸ்டரும், ஹைடெக்கும் அன்புமணியின் வெற்றிக்குக் கைகொடுக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்