ரகுராம் ராஜனா... அருண் ஜெட்லியா?

சுவாமியின் டார்கெட்

ந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை காலி​செய்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார், பி.ஜே.பி-யின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்குப் பதவி நீட்டிப்பு தரக் கூடாது, அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சுவாமி.

அதில், “ரகுராம் ராஜன் மனதளவில் முழு இந்தியர் அல்ல. அவர், அமெரிக்க அரசு வழங்கிய கிரீன் கார்டுடன் இந்தியாவில் இருக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை, வேண்டும் என்றே அவர் சீரழித்துவிட்டார்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள சுவாமி, “நம் நாட்டிலேயே தேசப்பற்று மிக்க ஒருவரை ஏன் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கக் கூடாது?” என்று கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, “இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கிறது என்று ஒரு பொருளாதார வல்லுநர் என்ற முறையில் ரகுராம் ராஜன் சொல்கிறார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் மூச்சுவிடும் நிலையில் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, நிலைமை திருப்திகரமாக இருப்பதாக இந்திய அரசு நினைக்கக்கூடாது என்று அவர் சொல்கிறார். இப்படிச் சொல்வது பல அமைச்சர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ என்று பிரதமர் மோடி என்னென்னமோ பேசி வருகிறார். எல்லாம் வெறும் வாய்சவடால்களாக இருக்கின்றனவே ஒழிய, அதனால் இந்தியப் பொருளாதாரத்துக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு பெருகவில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் பி.ஜே.பி அரசு தோல்வி அடைந்துள்ளது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னர்தான். ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கு மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளே காரணம். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி-யில்தான் சுவாமியும் இருக்கிறார். எனவே, அவர் யாரை எதிர்க்கிறார் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ரகுராம் ராஜனை எதிர்க்கிறாரா… நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை எதிர்க்கிறாரா? சுப்பிரமணியன் சுவாமி பெரிய பொருளாதார அறிஞர் என்றால், நேராக மோடியிடம் போய் அருண் ஜெட்லிக்குப் பதிலாக என்னை நிதி அமைச்சர் ஆக்குங்கள் என்று கேட்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்