“தேர்தல் தள்ளிவைப்பால் கொந்தளிக்கும் கட்சிகள்!”

யார் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்?

ஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் முதலில் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், கூடுதல் அதிர்ச்சியாக மேலும் 3 வாரங்களுக்குத் தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் கமிஷன். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தொடர்புகொண்டு, ஆட்சேபனைக் கருத்துகளை தேர்தல் கமிஷன் கேட்கவேண்டும். 27–ந் தேதிக்கு முன்பு முடிவு செய்து, வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விமர்சிக்கிறார்கள்.

சமரசம், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்: “தேர்தல் ஆணையத்துக்குச் சென்றுள்ள புகாரின் அடிப்படையில் தேர்தலை தள்ளிவைத்து உள்ளனர். இதில் ஆளும் கட்சி தலையிடவில்லை. தென்காசியில் ஒரு வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவையே நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக கருணாநிதி போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளார். இது சரியான  நடைமுறை  இல்லை. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை நாங்கள் எதிர்த்தோம். தற்போது மீண்டும் தள்ளிவைத்துள்ளதையும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாங்கள் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.’’

மா.சுப்பிரமணியன், தி.மு.க எம்.எல்.ஏ.: “தேர்தல் கமிஷன் பெரிய அளவில் அ.தி.மு.க-வுக்கு சாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இரண்டு தொகுதிகளிலும் திட்டமிட்டபடி தேர்தல் நடந்தால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். அப்படி வெற்றி பெற்றால் எங்கள் கூட்டணியின் எண்ணிக்கை 100 ஆக உயரும். அப்படி நடந்தால், தி.மு.க-வில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுப்பதற்கு அ.தி.மு.க செய்த சூழ்ச்சிக்குத் தேர்தல் ஆணையம் பலியாகி இருக்கிறது.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்