மிஸ்டர் கழுகு: சேஞ்ச்... சேலஞ்ச்... ஜெ.!

மிழக முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாகப் பதவி ஏற்கும் வைபவத்துக்குச் சென்றுவிட்டு நேராக ஆபீஸில் ஆஜரானார் கழுகார். டேபிளில் இருந்த நோட்புக்கில் தனது பேனாவால் ஸ்டார் குறியீடு ஒன்றை வரைந்தார். நாம் ஒன்றும் புரியாமல் அதைப் பார்த்துகொண்டிருந்தோம். நம் குழப்பத்தைப் புரிந்துகொண்ட கழுகார், ‘‘வர்த்தக விளம்பரங்களில்  எல்லாவற்றையும் சொல்லி​விட்டுக் கடைசியாக, ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்பார்கள். அதைக் குறிப்பிடுவதற்காக ஸ்டார் குறியீடு போடுவார்கள். அதுபோலத்தான், முதல்வர் ஜெயலலிதா அறிவித்த புதிய அறிவிப்புகள் அனைத்தும் கண்டிஷன்களுக்கு உட்பட்டவை” என்று சிரித்தபடி சப்ஜெக்ட்டுக்குள் போனார்.

‘‘சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில், ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்...” என்று தொடங்கி, 28 அமைச்சர்களுடன் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அங்கிருந்து தலைமைச்​செயலகம் சென்றார். கட்அவுட்கள், பேனர்கள் இல்லாமல்  நடந்த விழாவில் ஜெ.-விடம் சேஞ்ச் தெரிந்தது. புதிய ஆட்சியில் சேலஞ்சும் இருக்கிறது. முதல்​நாள் அன்று, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், 5 கோப்புகளில் கையெழுத்​திட்டார். முதலில், டாஸ்மாக் விவகாரத்தைப் பற்றிச் சொல்கிறேன். மதுவிலக்கைப் படிப்படியாகக் குறைப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஜெயலலிதா, “மதுக்கடைகள் திறக்கும் நேரத்தை 10 மணி என்பதை மாற்றி, 12 மணி முதல் திறக்கப்படும்; முதற்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.’’

“இந்த அறிவிப்புகள் மூலம், டாஸ்மாக் விவகாரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?”

“முதல்வர்  ஜெயலலிதா, மதுக்கடைகள் தொடர்பாக அறிவித்துள்ள இந்த இரண்டு அறிவிப்புகளால், எந்த மாற்றமும் நிகழாது. டாஸ்மாக் வருமானமும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழகத்தில் 6 ஆயிரத்து சொச்சம் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு நாளைக்கு, 65 கோடி ரூபாய் முதல் 68 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கிறது. அரசாங்கம் முதற்கட்டமாக, குறைப்பதாக அறிவித்துள்ள 500 கடைகள், விற்பனை மிக மிக மந்தமாக உள்ள கடைகள். அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான். அதனால், அரசாங்கத்துக்கு எந்த நஷ்டமும் பெரிதாக ஏற்படாது. அதுபோல, 2 மணி நேரத்தைக் குறைப்பதால், எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. காலை 10 மணி முதல் 12 மணிவரை ஒரு மதுக்கடையில் சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் மது விற்பனையாகும். அந்த நேரத்தில் கடை திறக்கப்படாமல் இருப்பதால், மிகப் பெரிய நஷ்டமோ, மாற்றமோ ஏற்படப்போவதில்லை. 12 மணிக்குக் கடையைத் திறக்கும்போது, இரண்டு மணிநேரம் தடைப்பட்ட விற்பனை ஜெகஜோதியாய் களைகட்டும். அதனால், வருமானம் ஈடுகட்டப்படும். மது விவகாரத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் இந்தப் புதிய அறிவிப்புகளால், எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஒரே ஒரு ப்ளஸ் பாயின்ட்... அதிகாலை முதலே டாஸ்மாக் வாசலில் கைநடுக்கத்துடன் காத்துக்கிடக்கும் குடிமகன்களை இனி காணமுடியாது. பிஸியான காலை 10 மணிக்கெல்லாம் சுதியை ஏற்றிக்கொண்டு சாலையில் கிடக்கிற காட்சிகளை இனி காண்பது அரிதாக இருக்கும்.”

“100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்துள்ளாரே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்