அதே தேதி... அதே காட்சிகள்!

சென்டிமென்டான சென்டினரி ஹால்!

“அலங்கார வளைவுகள் இல்லை, ஆள் உயர பேனர்களும் இல்லை, ஜெயலலிதா காலில் அமைச்சர்கள் விழும் கலாசாரம் மிஸ்ஸிங்” என பல ஆச்சர்யங்களோடு அ.தி.மு.க அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தேறியது.

அதே நாள்... அதே இடம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டதும் கடந்த ஆண்டு மே 23-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. இந்த ஆண்டும் அதே நாளில் முதல்வர் பொறுப்பை ஏற்றது செம சென்டிமென்ட். பதவியேற்பு விழாவை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நடத்தலாம் என்று ஜெயலலிதாவே தெரிவித்தாராம். நூற்றாண்டு விழா அரங்கும் சென்டிமென்ட் ஹாலாக மாறிவிட்டது அவருக்கு.

பதவியேற்புக்கு இரண்டு நாட்கள் முன்பே சென்னைப் பல்கலைக்கழக வளாகம் அருகே பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடங்கிவிட்டன. அரங்கைத் தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்றது. சனிக்கிழமை அன்று போயஸ் கார்டன் முதல் விழா மண்டபம் வரை, கொடிகளையும் தோரணங்களையும் அ.தி.மு.க-வினர் கட்டத் தொடங்கினர். வழக்கம் போல் பேனர்களையும் வரிசையாக வைக்கத் தொடங்கினர். ஆனால், மறுதினமே மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து முதல்வரை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்