புதிய முயற்சிகளுடன் புத்தகக் காட்சி!

முதன் முறையாக தீவுத்திடலில்...ஜூன் 1 முதல் 13 வரை...

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 39-வது சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பபாசியின் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன், செயற்குழு உறுப்பினர் குமரன் ஆகியோரிடம் பேசினோம்.

காந்தி கண்ணதாசன்:  ‘‘இதுவரை நடைபெற்ற புத்தகக் காட்சிகளைப்போல அல்லாமல் இதில், பல புதுமைகளைக் கொண்டு வருகிறோம். புத்தக விற்பனை என்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த வகையில் பெண்கள், குழந்தைகள், எழுத்தாளர்கள், பழங்கலைகள், ஊடகம் என ஒவ்வொரு நாளும் ஒரு கான்செப்ஃட் கொண்டு வருகிறோம். உதாரணமாக, பெண்கள் தினம் என்றால் அன்றைக்கு அரங்கம், மேடை என அனைத்தும் பெண்களை முன்னிலைப்படுத்தியே இருக்கும். பெண்கள் தொடர்பான புத்தகங்கள்முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கும். காட்சி ஊடகத்தில் இருந்து பெண்களை மீட்டு வருவதற்கான ஒரு முயற்சியாக அது இருக்கும். அதேபோல குழந்தைகள் தினம் அன்று குழந்தைகளை முன்னிலைப்படுத்தியே அனைத்தும் இருக்கும். 

வாட்ஸ்அப், முகநூல் என வந்துவிட்ட பிறகு வாசிப்பு குறைந்துள்ளது. ஸ்மார்ட்போனில் எல்லாமே கிடைக்கிறது. வாட்ஸ்அப்பில் வந்த ஒரு விஷயத்தை, அதுபற்றி யோசிக்காமலே ஃபார்வர்டு செய்கிறார்கள். அவர்களிடம் சிந்தனையில் ஆழம் இல்லாததே அதற்குக் காரணம். புத்தகங்களை வாசித்தால்தான் சிந்தனை ஆழமாகும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்