ஆபாசப் படம் எடுத்த பாதிரியார்! - இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!

பாலியல்

ல்ல ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய பாதிரியார் ஒருவர், பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தால் நெல்லை வட்டாரமே அதிர்ந்துபோயிருக்கிறது. அந்த பாதிரியாரின் டார்ச்சர் குறித்துப் புகார் செய்வதற்கு காவல் நிலையம் சென்ற இளம்பெண் ஒருவர், அங்கு போலீஸார் பிளாக்மெயில் செய்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட துயரமும் நெல்லை வட்டாரத்தைக் கலங்கவைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்தவர், 35 வயதான ஜோஸ்வா இம்மானுவேல்ராஜ். பாதிரியாரான இவர், நெல்லை மாவட்டம் தாழையூத்துப் பகுதியில் மதப் பிரசங்கம் செய்துவந்துள்ளார். இவர், குடும்பப் பிரச்னை தீரவும், நோய்களில் இருந்து மீளவும் பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்த வகையில், பாப்பான்குளத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பி.எட் மாணவியின் குடும்பத்தினருடன் ஜோஸ்வாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. பிரார்த்தனை செய்வதற்காக அடிக்கடி சென்று வந்த அவர், குடும்பத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் பழகியிருக்கிறார். அதன் பிறகுதான், ஜோஸ்வா தன் கைவரிசையைக் காட்டியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்