“சிறப்பாகச் செயல்பட்டது சென்னை மாநகராட்சி!”

அதிகாரி தரும் அதிரடி விளக்கம்மறுப்பு

‘சென்னை மாநகராட்சி, செயல்படாத ஆட்சி’ என்ற தலைப்பில் கடந்த 23-10-16 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் அளித்துள்ள பதில் இது...

“திடக்கழிவு மேலாண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையால், மிகுதியாகக் கருதப்பட்ட தொகுப்பு மையங்கள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த மையங்கள் ஆகியவை மட்டுமே மூடப்பட்டன. எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம், மணலி சாலை ரயில்வே மேம்பாலம் ஆகியவை ரூ.117.47 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் உள்ள 24 முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 30 முக்கிய சாலைகளை உலகத்தரத்துக்கு மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஹாரிங்டன் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் லூப் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக டாக்டர் அம்பேத்கர் சாலை, அசோக் நகர் 4-வது, 1-வது, 11-வது நிழற்சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் போடப்படும் அனைத்துத் தார்சாலைகளும் பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகளாக அமைக்கப்படுகின்றன. இதுவரை 714 சாலைகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ள சாலைகள் 2 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

கோடம்பாக்கம், வடபழனி, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைப் பணிகளுக்கான திட்ட அறிக்கையின் வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

142 சுடுகாடுகள் மின் மயானமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் 3 மயானங்கள் மின் மயானமாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 7 இடங்களில் நவீன மின் மயானங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொசு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பூங்காத் துறையின் மூலம் 5 லட்சம் நொச்சிச்செடிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள், பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கொசுக்களை ஒழிக்க ரூ.9.97 கோடி செலவில் 5.89 லட்சம் கொசுவலைகள், நீர்நிலைகளின் ஓரம் வசிக்கும் மக்களுக்கும், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 1,229 கி.மீ-க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்