பலி வாங்கிய பால்குடம்! - அ.தி.மு.க. அட்ராசிட்டி

கொடுமை

ஜெயலலிதா பூரண உடல் நலம்பெற வேண்டி நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில், இருவர் பலியான சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுக்க பூஜை, யாகம், பால்குடம் என அ.தி.மு.க-வினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில், கூட்ட நெரிசலில் பலர் படுகாயம் அடைந்ததோடு, பெண் ஒருவர் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்.

பால் குடம் எடுக்க சென்றவர்களிடம் பேசியபோது, ‘‘அம்மாவுக்காக பால் குடம் எடுக்கின்றோம். நீங்கள் எல்லோரும் அவசியம் பால் குடம் எடுக்க வரவேண்டும் என்று, டோக்கன் கொடுத்து கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். எங்களுடன்தான் ‘கமலா’ம்மாவும் வந்தாங்க. பல ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் கோயிலில் குவிந்து இருந்தனர். எங்களுடன் வந்த ஒரு பொண்ணுக்கு திடீர்னு பாம்பு கடிச்சிடுச்சுனு ஆஸ்பத்திரிக்குக் கூட்டினுப் போனாங்க. அப்பவே மனசுல பயம் வந்துருச்சு. கொஞ்ச நேரத்துல, கோயிலின் முன்பக்கக் கேட்டை மூடிட்டு, கோயிலின் பின்னாடி கேட் வழியா வந்து பால்குடத்தை வாங்கிக்கச் சொன்னாங்க. திபு திபுனு பால் குடத்த வாங்க ஓடினாங்க. உள்ளே போக முடியாம ஒருத்தர் மேல ஒருத்தரு விழுந்து மிதிபாடுகளுக்குள்ள சிக்கிக்கிட்டாங்க. இதில் 20 பேருக்கு மேல மூச்சுத் திணறல். அதையும் மீறி கோயிலுக்கு உள்ளே போனவங்களை வெளியே விடாம மெயின் கேட்டை மூடிட்டாங்க. 500 பேர் இருக்க வேண்டிய கோயிலுக்குள்ள 1,500 பேருக்கு மேல அடைச்சுட்டாங்க. இதனால, உள்ளேயும் 10 பேருக்கு மேல மூச்சு விடமுடியாம மயங்கிட்டாங்க. இவ்வளவு கூட்டத்துக்கும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை’’ என்றனர் கொதிப்புடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்