ரயில் ‘ஹைஜாக்...’ விலகாத மர்மம்! வழக்கை மூட முயற்சியா?

திருப்பம்

ழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பயங்கரம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயிலை திடீரென கிளப்பிக்கொண்டுச் சென்றார் மர்ம நபர் ஒருவர். அந்த ரயில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில், எதிரே வந்த சரக்கு ரயிலுடன் பயங்கரமாக மோதியது. அதில், நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மர்ம நபர் யார் என்ற விவகாரத்தில் இப்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

2009 ஏப்ரல் 29-ம் தேதி அதிகாலை நேரம். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையம் பரபரப்பின்றி காணப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு, மின்சார ரயில் ஒன்று, திருவள்ளூருக்குப் புறப்படத் தயாராக இருந்தது. 2 நிமிடங்களுக்கு முன்பாக, அதாவது, 4.58 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த ரயிலில் பயணிகள் இருந்தனர்.

வழக்கமாக, சென்ட்ரலில் இருந்து அடுத்த ரயில் நிலையமான பேசின்பிரிட்ஜ் ரயில் சந்திப்பு வரை ஆமை வேகத்திலேயே ரயில்கள் பயணிப்பது வழக்கம். ஆனால், அந்த ரயிலோ, புறப்பட்ட சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது. பேசின்பிரிட்ஜில்  அந்த ரயில் நிறுத்தப்படவில்லை. அதற்கு அடுத்த, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே மின்னல் வேகத்தில் அந்த ரயில் சென்றது. அப்போது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்றது. சில நிமிடங்களில், இரண்டு ரயில்களும் பயங்கரமாக மோதின.  அதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ், ஈரோடு ஆரோக்கியநாதன், ஆவடி மோகன்ராஜ் உள்பட 4 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்த மின்சார ரயிலை இயக்கியது ரயில்வே டிரைவர்  அல்ல என்றும், வேறு யாரோ ஒருவர் ரயிலை இயக்கினார் என்பதையும் அறிந்து ரயில்வே நிர்வாகமும், ரயில்வே போலீஸாரும் அதிர்ந்தனர்.

முதலில், இந்த வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. ரயிலை இயக்கியது யார் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்ததுதான் மிச்சம்.

“இந்த வழக்கில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா?” என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “அந்த விபத்து நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. விபத்தில் இறந்த 4 பேர்களில் மூன்று பேருடைய அடையாளம் தெரிந்துவிட்டது. அவர்கள் யாரும் ரயிலை இயக்க வில்லை. ரயிலை இயக்கிய மர்ம நபர் யார் என்பதே இந்த வழக்கில் மர்மமுடிச்சாக இருந்தது. விபத்தில் சிக்கி அடையாளம் காணப்படாத ஒருவரின் உடலைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த உடலின் கையில் தெலுங்கு மொழியில் நாகா ராஜா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதையடுத்து, ஆந்திராவில் 9 மாவட்டங் களிலும், ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையான ராஜகடா என்ற மாவட்டத்திலும் விசாரணைநடத்தினோம். அப்போது, ராஜகடா என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், நாகாராஜா புகைப்படத்தைப் பார்த்து அது தன் கணவர் என அடையாளம் காட்டினார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் மகனுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. அது ஒத்துப்போகவில்லை. எனவே, அடுத்தடுத்து 4 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்தினோம். கடைசியாக, திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், நாகாராஜாவின் பெயரைத் தவிர மற்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்