கிட்னிப் பிரச்னையா?

சிகிச்சை

ப்போலோவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா எப்போது வெளியே வருவார் என்கிற கேள்வி, மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அது குறித்து அரசுத் தரப்பின் பதில் என்னவோ, மௌனம்தான்.

ஒரு மௌனம் பல பதில்களைப் பதுக்கிவைத்திருக்கும் என்பார்கள். அரசின் மௌனப் பின்னணியிலும் பல ரகசியங்கள் நிச்சயம் இருக்கும். முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீரக நோய்த்தொற்று என பல்வேறு தகவல்கள் கசிந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது, முதல்வருக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது முதல்வர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை ஜெ. உடல்நலம் குறித்து அப்போலோ வெளியிட்ட 11 அறிக்கைகளிலும் சிறுநீரகச் சிகிச்சைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதிகக் காய்ச்சல் மற்றும் நீர்சத்துக் குறைபாடு காரணமாகத்தான் முதல்வர் அனுமதிக்கப்​பட்டார் என்றே சொல்லப்​பட்டு வருகிறது.

“தொண்டையில் அறுவைச்சிகிச்சை செய்து, டியூப் வழியே உணவு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளதா? பொதுவாக, யாருக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்படும்?” என டிரான்ஸ்பிளான்ட் நெஃப்ராலஜி நிபுணர் வி.சந்திரசேகரிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்