மிஸ்டர் கழுகு : கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா!

‘ரேப்பர் ரெடி செய்யவும்’ என்று கழுகார் அனுப்பிவைத்த ‘கையெழுத்து...  பத்திரம்... ஜெயலலிதா!’ என்கிற டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன.    லே-அவுட்டுக்கு தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகப் புத்தாடையில் வந்தார் கழுகார். குறிப்பு நோட்டை புரட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

‘‘அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைத் தாண்டிவிட்டது. அவரது உடல்நலம் தேறிவர வேண்டும் என தமிழகமே பிரார்த்திக்கிறது. லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் என டாக்டர்கள் படையெடுத்தபடியே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சத்தமில்லாமல் ஒரு காரியம் நடந்து கொண்டிருக்கிறதாம். அடுத்து நான் சொல்லப்போகும் தகவல் அ.தி.மு.க-வின் உள் வட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னது.

‘சில சொத்துக்களைக் கை மாற்றும் காரியங்கள் ரகசியமாக நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்பதுதான் அவர் சொல்வது.”

‘‘அதிர்ச்சியாக இருக்கிறதே!’’

‘‘ஹைதராபாத் ஜிடிமேட்லா ஏரியாவில் சுமார் 15 ஏக்கர் விவசாய நிலத்தை 1968-ம் ஆண்டு ஜெயலலிதா வாங்கினார். அப்போது அதன் மதிப்பு 1.78 லட்சம் ரூபாய். ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. இப்போது இந்த சொத்தின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டிவிட்டது. தேர்தல் கமிஷனில் ஜெயலலிதா தாக்கல்செய்த வேட்புமனுவில்கூட இந்த சொத்தின் மதிப்பு ரூ.14.44 கோடி எனச் சொல்லியிருக்கிறார். இதே போல் ஹைதராபாத் நகர் காலனியில் ஜெயலலிதாவும் அவருடைய தாயாரும் சேர்ந்து 651.18 சதுர மீட்டர் கட்டடத்தை 1967-ல் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பு ரூ.5.03 கோடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்