ஜெயலலிதாவுக்கு வழிபாடு... அமைச்சருக்கு துதிபாடு!

ராமநாதபுரம் ரகளைகோஷ்டிப் பூசல்

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் இருக்க... ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க, கோஷ்டிப் பூசலில் உச்சத்தை தொட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் அன்வர்ராஜா எம்.பி ஆகியோரை அமைச்சர் மணிகண்டன் புறக்கணித்துவருவது கட்சிக்குள் உரசல்களை உண்டாக்கியிருக்கிறது.

‘‘எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க-வின் கோட்டையாகவே ராமநாதபுரம் மாவட்டம் திகழ்ந்துவருகிறது. கட்சி பிளவுபட்டிருந்த சமயத்தில்கூட, பரமக்குடி தொகுதியில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. அப்படிப்பட்ட ராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகிகளிடையே கடுமையான மோதல் போக்கு எழுந்துள்ளது. இப்போது இருக்கிற நிர்வாகிகள் சீனியர்களை மதிப்பதில்லை. இதற்கு உதாரணம் அமைச்சர் மணிகண்டனின் செயல்பாடுகள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான சீனியர்கள், விசுவாசிகள் இருந்தபோதும், ஜூனியரான மணிகண்டனுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், மனச் சோர்வினையும் புறந்தள்ளிவிட்டு அம்மாவால் அறிவிக்கப்பட்ட மணிகண்டனின் வெற்றிக்கு ஒன்றிணைந்து உழைத்தோம். அதன் பயனாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று அமைச்சரும் ஆனார்” என்ற சொன்ன சீனியர் ஒருவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களை வலிய தேடிப் போய் மணிகண்டன் ஆதரவு கேட்டார். ஆனால் அமைச்சரான பிறகு தலைகால் புரியாமல் நடந்துகொள்கிறார். கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், சீனியர்கள், தொண்டர்கள் என எல்லோரையும் காக்க வைப்பதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. வயதில் மூத்த நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைப்பது, அரசு நிகழ்ச்சிகளில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளை வதைப்பது, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது என அவரது போக்கே சரியில்லை.

மாவட்டச் செயலாளர் முனியசாமியின் ஏற்பாட்டில் பரமக்குடியில் அம்மாவின் உடல் நலன் வேண்டி 10 ஆயிரம் பேர் பங்கேற்ற பால்குடம் எடுக்கும் வழிபாடு நடந்தது. எம்.பி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள எல்லா நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களோடு பங்கேற்று பிரார்த்தனைச் செய்தனர். மாவட்டச் செயலாளர் முனியசாமியையும் எம்.பி. அன்வர் ராஜாவையும் புறக்கணிக்கும் விதமாக இந்த வழிபாட்டில் அமைச்சர் பங்கேற்கவில்லை. அதோடு தன் ஆதரவாளர்களையும் ‘அந்தப் பூஜையில் பங்கேற்க வேண்டாம்’ என அமைச்சர் தடுத்துள்ளார். வழிபாட்டில் பங்கேற்காமல் போனால் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக தலைமையிடம் இருந்து தப்பிக்கும் வகையில் அன்றைய தினம் தனது துறை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகக் காட்டிக் கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்