‘‘குறுக்கு வழியில் வென்றவர்களைப் பார்த்து மயங்காதீர்கள்!’’

திருப்பூரில் தமிழ் மண்ணே வணக்கம்!விழிப்பு உணர்வு

திருப்பூர் அவினாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் ஜூனியர் விகடன் சார்பில் தமிழ் மண்ணே வணக்கம் நிகழ்ச்சி நடந்தது. கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் நித்யானந்தம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் பேசியது உணர்ச்சிகரமானது.

‘‘உலக மக்கள்தொகை 700 கோடி. அதில், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது.  அதிக  எண்ணிக்கையில் இளைஞர்களைக்கொண்ட நாடும் இந்தியாதான். 130 கோடி மக்கள் வாழும் நாடு என்றால் 130 கோடி மக்கள் சந்தைகொண்ட  நாடு என்று பொருள். 130 கோடி மக்களுக்கான சந்தைகொண்ட நாட்டில் வேறு எந்தத் துறையைவிடவும் அதிக அளவு வேலைவாய்ப்பும் அதே அளவில் பொருள் ஈட்டக்கூடியதுமான ஒரு துறை உண்டென்றால், அது பொறியியல் துறைதான்.

130 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் பொறியியல் கல்வியின் வழியாக வேலை வாய்ப்பு என்பது அரிதான ஒன்று அல்ல; மாறாக எளிதானது. அப்படியென்றால் பொறியியல் படித்த எல்லோருக்கும் வேலை கிடைக்கிறதா என்ற கேள்வி வருகிறது. பொறியியல் படித்துவிடுவதால் மட்டுமே ஒருவருக்கு வேலை கிடைக்காது. அந்தத் துறையில் உரையாடலுக்குத் தேவையான ஆற்றலும், தான் நினைப்பதைச் சொல்வதற்கான மொழி அறிவும் இருப்பவர்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. உங்களை அச்சமூட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை. உங்களுக்கு அச்சமிருந்தால் அதைப் போக்குவதற்காகச் சொல்கிறேன். பொறியியல் கல்வியோடு மொழி அறிவையும் நீங்கள் வளர்த்துக்கொண்டால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உங்களால் எளிதில் போய்வர முடியும். உலகப் பொறியியல் வல்லுநர்களோடு போட்டிபோட்டு உங்களது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

ஆங்கிலம்தான் எல்லா மொழிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கிறது. எனவே, ஆங்கிலம் படித்தே ஆகவேண்டும். அது ஒன்றும் கடினமல்ல. தாய்மொழியைப் பிழையின்றிக் கற்றுக்கொண்டால் வேறு எந்த மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். அறிவு என்பது புதிதாக அறிவைத் தேடுவது அல்ல; நம்மிடம் என்ன அறியாமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதுதான். எனக்குத் தெரியும் என்று இருந்துவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்