துப்பாக்கி சத்தம்... தீவிரவாத மிச்சம்!

சிறையில் தப்பி தோட்டாவில் வீழ்ந்தவர்கள்!

ஊரே தீபாவளி பட்டாசு வெடிச் சத்தங்களில் மூழ்கிக் கிடந்த வேளையில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சிறைக் காவலர்கள் கத்திக் குத்துப்பட்டு அலறிய சத்தம் வெளியில் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

தென்னிந்திய மக்கள் கடந்த சனிக்கிழமையும், வட இந்திய மக்கள் அதற்கடுத்த நாளான ஞாயிறு (அக்-30)அன்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடந்தனர். அதிக கொண்டாட்டம் தந்த களைப்புடன் உறங்கப் போன அதிகாலையில்தான் மத்திய பிரதேச சிறையின் கழிவறை சுவரை உடைத்து சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை 3 மணி... மத்திய பிரதேச மாநிலம் கந்தவா மாவட்ட மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகள் அடைக்கப் பட்டிருந்த அறையில் விளக்கு எரிய ஆரம்பித்திருக்கிறது. தீவிரவாதிகளில் ஒருவன் கழிவறைக்கு சென்றான். கழிவறை சுவரை இடித்து ஆள் நுழைந்து வெளியேறும் அளவுக்கு வழியை ஏற்படுத்திவிட்டு அறைக்கு திரும்பினான். “எல்லாம் முடிந்துவிட்டது, நாம் போகலாம்” என்ற அவன் சிக்னலைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அங்கு அடைக்கப் பட்டிருந்த ‘சிமி’ அமைப்பின் மொத்தக் குழுவும் கழிப்பறை துளை வழியாக வெளியேறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்