அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி!

கவர் ஸ்டோரிஅட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, 40 நாட்கள் ஓடிவிட்டன. அவருக்கு சிகிச்சை எப்போது முடியும்; அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது ‘டாப் சீக்ரெட்’. ஆனால்கூட, இதுநாள்வரை ஜெயலலிதாவையே மையமாக வைத்துச் சுழன்ற அ.தி.மு.க-வும், தமிழக அரசாங்கமும் இப்போது எட்டு பேரை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன. இதைவிட ஆச்சர்யம், கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடியாக சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன; அவை அவசர அவசரமாக நிறைவேற்றவும் படுகின்றன.   

அ.தி.மு.க-வை நன்கு அறிந்தவர்களுக்குத்தான் தெரியும், இதற்குள் ஒளிந்திருக்கும் புதிரின் சிக்கல். உதாரணத்துக்்குச் சொல்லவேண்டுமானால், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா மூன்று மாதங்களாக தன்னைத்தானே வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டார். அந்த வழக்கில் இருந்து விடுதலையாகும் வரை அவர் வெளியில் வரவில்லை. அந்த நேரத்தில், இப்போதுபோல், எந்தத் திட்டத்தையும் அமைச்சர்கள் அறிவிக்கவில்லை; அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தவில்லை; செயல்படுத்திய திட்டங்களை முழுமையாக முடிக்கவில்லை. எல்லாவற்றையும் கிடப்பில்போட்டு, ‘அம்மா வரட்டும்!’ என்று காத்திருந்தனர். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. இப்போது, அ.தி.மு.க என்ற கட்சியையும் அரசாங்கத்தையும் பின்னால் இருந்து பரபரப்பாக இயக்கும் சக்திகளாக சசிகலா,  ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ், சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் அண்ணி இளவரசி, அவரது மகன் விவேக் ஜெயராமன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் சிலரின் வாரிசுகளும் திரைமறைவில் களத்தில் நிற்கின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்