கழுகார் பதில்கள்

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

? தடகள வீராங்கனை புதுக்கோட்டை சாந்திக்கு தமிழக அரசு பணி நியமனம் வழங்கி இருப்பது பற்றி?


! காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் சாந்தி. பாலின பிரச்னையைக் கிளப்பி அவரது பதக்கத்தையும் பறித்தார்கள். விளையாடவும் தடை விதித்தார்கள். இதனால் நொந்துபோய் தற்கொலை வரைக்கும் போனார். தமிழக அரசு அவருக்கு ரொக்கப் பரிசு வழங்கியது. தற்காலிக தடகள பயிற்சியாளராக செயல்பட அனுமதியும் வழங்கியது. ஆனால் அவரை நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கவில்லை. வழக்குப் போட்டார். எதுவும் நடக்கவில்லை. இதேபோன்ற பிரச்னைதான் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த டூட்டி சந்த் என்பவருக்கு ஏற்பட்டது. அவர் வழக்குப் போட்டார். அந்த மாநில நீதிமன்றம் அவர் விளையாட அனுமதி வழங்கியது. சாந்திக்கு அந்த நீதி கிடைக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்