அமெரிக்க தேர்தலுக்கும் தமிழக அரசியலுக்கும் வித்தியாசம் இல்லை!

அரசியல்

மிழக தேர்தல் சமயங்களில் ஜெயலலிதாவின் குட்டிக்கதைகள் பிரபலமானவையாக இருக்கும். அதேபோல்தான் அமெரிக்கத் தேர்தலும்.... ஒரு வியாபாரி நாட்டின் அரசனாக வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து தனது வியாபார புத்தியையே காட்டுகிறார். பொது மேடையில் சக பெண் வேட்பாளரை இழிவாகப் பேசி, இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழக்கிறார். கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் தேர்தலின் கதை இதுதான்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் இருவரும் நெறிமுறையாளர் உதவியோடு விவாதத்தில் ஈடுபடுவது முக்கியமான ஒன்று. அந்தவகையில், இந்த முறை அதிபர் வேட்பாளர்களான ஹிலரி, ட்ரம்ப் இருவரும் பொதுமேடையில் நேருக்கு நேர் வாதித்து வருகின்றனர். முதல் விவாதத்தில் ஹிலரியை ட்ரம்ப் கேலி செய்தது வைரல் ரகம் என்றாலும் சகட்டு மேனிக்கு வாங்கிக் கட்டிக்கொண்டார். அடுத்த விவாதத்தில் திருந்துவார் என்றால் அதுவுமில்லை. பெண்களை விமர்சிப்பது, ஹிலரி மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துவது என அடாவடித்தனமான பதில்களால் தொடர்ந்து ட்ரம்பின் செல்வாக்கு சரிவை நோக்கியே பயணித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்