“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ?” - அஞ்சிய ஜெ.

அந்த நாள்தமிழில்: ஆர்.சுனந்தா

தெலுங்குத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்த, மறைந்த நடிகர் சோபன் பாபு தன்னுடன் நடித்த கதாநாயகிகள் குறித்து, தெலுங்கு இதழ் ஒன்றில் தொடர் கட்டுரை எழுதினார். அதில், ஜெயலலிதா பற்றிய கட்டுரை இது:

 “திரை உலகுக்கு நான் வந்த ஐந்தாறு வருடங்கள் கழித்துதான், திரை உலகுக்கு ஜெயலலிதா வந்தார். வந்த வேகத்தில் ‘ஸ்புட்னிக்’ வேகத்தில் உயரே போய்விட்டார். எல்லா இடங்களிலும் அவரைப் பற்றிய பேச்சுதான்... அவருடைய பாடல்கள்தான். அப்போது, நான் சிறு சிறு வேடங்களில்தான் நடித்துக்கொண்டு இருந்தேன். ‘வீர அபிமன்யு’ படத்தில் அபிமன்யுவாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வரலாற்றுரீதியான படங்கள் குறைந்து சமூகக்கதைகள் கொண்ட படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. அப்போது, பட வாய்ப்புகள் எனக்குக் குறைந்துவிட்டன. வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தேன். அந்த நேரத்தில், ஏரோபிளேன் மாதிரி பெரிய கார் ஒன்று எங்கள் வீட்டுக்கு முன் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய தயாரிப்பாளர் ஒருவர்,  ‘நான் எடுக்கப்போகும் படத்தில் நீங்கதான் ஹீரோ. ஜெயலலிதாதான் ஹீரோயின்’ என்று சொல்லி, ‘அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்’ என ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். சந்தோஷத்தில், எனக்குத் தலைகால் புரியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்