“கனவை நனவாக்கிய விகடனுக்கு நன்றி” - விழிகளில் உருகும் வினிதா

ஆக்‌ஷன் ரிப்போர்ட்நெகிழ்ச்சி

வினிதாவை யாருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை. கோடிக்கணக்கான முதல் தலைமுறையினர் தினசரி காணும் கோடி கனவுகளில் ஒரு சிறிய கனவுக்குச் சொந்தக்காரி வினிதா.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள வாழைகிரி கிராமத்தின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் வினிதா. அவருடைய கனவை நனவாக்கியது ஜூ.வி.

விவரமாகச் சொல்கிறோம்....

பழனி மலை காடுகளில் வாழ்ந்த இவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் வாழைகிரி பகுதியில் வனத்துறையினர் காட்டை விட்டு அகற்றிக் குடி அமர்த்தினர். பள்ளிக்கூடம், மருத்துவ வசதி என்று எதுவும் இல்லாத அந்தப் பழங்குடி முகாமில் இருந்து அருகில் இருக்கும் பண்ணைக்காடு என்னும் ஊருக்குப் படிக்கச் சென்ற வினிதா 12-ம் வகுப்பை முடித்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு என்ன பிரச்னை என்று அவரே சொல்கிறார்... “நர்சிங் படிக்க ஆசைப்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்து காத்திருந்தேன். நர்சிங் கவுன்சிலிங் சென்னை கீழ்பாக்கத்தில் நடந்துகொண்டு வந்தது. எனக்கு 19-ம் தேதி இரவு ஏழு மணிக்கு பூலத்தூரில் இருக்கும் போஸ்ட்மேன் போன் செய்தார். கவுன்சிலிங் லெட்டர் வந்திருக்கு வந்து வாங்கிக்க என்றார். என் சித்தப்பா எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாங்கி வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்