நம்ம பாட்டன் சொத்து... முப்பாட்டன் சொத்து! - ஏரி காக்கும் கலெக்டர்

சுற்றுச்சூழல்

ரிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள், சுயநலம்கொண்ட மனிதர்களின் பேராசையால் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில், அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து நீர்நிலைகளைக் காக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன்.

“காவிரியில் தண்ணீர் கேட்கும் நீங்கள், உங்கள் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை எந்த அளவுக்குப் பராமரிக்கிறீர்கள்?’’ என்று தமிழ்நாட்டினரைப் பார்த்து கர்நாடக மாநிலத்தவர் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் பலவற்றை தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆக்கிரமித்துள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் அரசாங்கமும் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது. இந்தச் சூழலில், நீர் நிலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையோடும், ஆர்வத்தோடும் செயல்படும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்