“கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா!” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை...

குற்றம்

‘தூய்மை இந்தியா’ என்று சொல்லி, பிரதமரே துடைப்பம் ஏந்தி வலம் வரும் காலத்தில், பள்ளிக்கூட கழிப்பறைகளைக் கழுவுமாறும், வகுப்பறைகளைச் சுத்தம் செய்யுமாறும் தலித் மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்படும் கொடுமை, மதுரை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடப்பதாக பகீர் கிளப்புகிறார்கள் கீழையூர் மக்கள்.

 “இந்தப் பள்ளிக்கூடத்தில், தலைமை ஆசிரியராக இருப்பவர் மாணிக்கவள்ளி. இவர், பள்ளிக்கூட கழிப்பறைகளைக் கழுவுமாறு தலித் மாணவிகளைக் கட்டாயப்படுத்துகிறார். தலைமை ஆசிரியர் கழிப்பறைக்குச் சென்றால், தலித் மாணவிகள் வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்யவும் தலித் மாணவிகளை நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். அதேபோல, டீ, வடை வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளுக்குத் தலித் மாணவர்களை நிர்பந்தம் செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்கள் கீழையூர் பகுதி மக்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்