சாட்டையை வீசுமா நீதிமன்றம்? - திக்... திக்... 7-ம் தேதி

வழக்கு

ரெய்டு, பண விநியோகம் எதிரொலியாக இந்திய வரலாற்றில் முதல் முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த தொகுதிகளுக்கு இப்போது தேர்தல். புகாருக்கு ஆளானவர்களே மீண்டும் களமிறங்கியிருக்கும் நிலையில் இரண்டு தொகுதிகளிலும் வெப்பம் தகிக்கிறது. ‘தேர்தல் கமிஷனால் கண்டிக்கப்பட்ட இரண்டு திராவிட கட்சிகளின் வேட்பாளர்களும் மீண்டும் எப்படி போட்டியிடலாம்?’ என நீதிமன்றங்களில் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன. இந்த வழக்கில் 7-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்குமா? என எதிர்பார்ப்புகள் எழுந்து நிற்கின்றன.

‘அரவக்குறிச்சி தொகுதியில் புகாரில் சிக்கியவர்களே மீண்டும் போட்டியிட்டால் நியாயமான தேர்தல் நடக்காது. அதனால் அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும், அவர்களுக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கக் கூடாது. அப்படியே போட்டியிட்டால் அவர்களுக்குப் பதிவான ஓட்டுகளை எண்ணக்கூடாது. அவர்களது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’ எனச் சொல்லி கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வழக்கு போட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. ராஜேந்திரனுக்காக வழக்கறிஞர் ஜோதி ஆஜர் ஆனார். ‘‘சட்டசபை தேர்தலின்போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.  இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்டவர்களே மீண்டும் போட்டியிட்டால் மகாத்மா காந்தியே அங்கே நின்றாலும் டெபாசிட்கூட பெற முடியாது. குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டி​யிட்டால் அவர்களது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என வாதிட்டார். தேர்தல் ஆணையம், செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமி ஆகியோருக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்