கழுகார் பதில்கள்!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

? சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவரை விடுதலை செய்யவேண்டி அ.தி.மு.க-வினர் அன்று நடத்திய பிரார்த்தனைக்கும். இன்று உடல்நலம் வேண்டி செய்யும் பிரார்த்தனைக்கும் என்ன வித்தியாசம்?

! கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் என்ன விசாரணை நடக்கிறது, நம் தரப்பு வழக்கறிஞர் என்ன சொல்கிறார், எதிர் தரப்பு வழக்கறிஞர் என்ன சொல்கிறார், நீதிபதிகள் என்ன மாதிரியான எதிர்வினைகள் காட்டுகிறார்கள், எப்போது விசாரணை முடியும், எப்போது தீர்ப்பு வரும் என்பது எல்லாம் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன் வரைக்கும் தெரியும். அதனால் நம்பிக்கையுடன் தன்னுடைய பிரார்த்தனையைச் செய்தான்.

ஆனால் இன்று அப்போலோவின் இரண்டாவது தளத்தில் அம்மா இருக்கிறார் என்பதைத் தவிர அ.தி.மு.க. தொண்டனுக்கு எதுவும் தெரியாது. என்ன நோய், அது எதனால் வந்தது, இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது, குணம் அடைந்து வருகிறாரா, எப்போது குணம் அடைவார், என்ன மாதிரியான சிகிச்சை தரப்படுகிறது, இன்னும் எவ்வளவு காலத்துக்கு சிகிச்சை பெற வேண்டும், எப்போது அவர் கார்டன் திரும்புவார், முன்னைப் போல அவரால் செயல்பட முடியுமா, இரட்டை விரலை காட்டியபடி காரில் ஏறி உட்கார்ந்துக் அப்போலோவில் இருந்து வெளியில் வருவாரா... இது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. இந்தக் குழப்ப மனநிலையோடு பிரார்த்தனை செய்கிறான் தொண்டன் இப்போது.

அப்போது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்