முலாயம் சிங் குடும்பம்... முழிபிதுங்கும் ஜாதகம்!

வாரிசுகள்ஓவியம்: கண்ணா

ந்தியாவின் அரசியல் குடும்பங்களில் நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம், லல்லு பிரசாத் யாதவ் குடும்பங்களைப் போல முலாயம் சிங் யாதவ் குடும்பமும் முதன்மையானது. இந்திய அரசியலை உத்தரபிரதேச அரசியல்தான் தீர்மானிக்கிறது. நேரு குடும்பத்தைப் போலவே முலாயம் சிங் யாதவின் வேரும் உ.பி-யில்தான் இருக்கிறது.

கருணாநிதியின் குடும்பத்தைப் போலவே அரசியல் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் என்றாலும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்கே மகனுக்கு மகுடம் சூட்டினார் முலாயம். இங்கே இன்னும் இழுபறி. மகன் அகிலேஷ் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் சித்தப்பா ஷிவ்பால் சிங்கால் நாற்காலி ஆட்டம் காண்கிறது. விரைவில் உ.பி-யில் சட்டசபைத் தேர்தல். மீண்டும் முலாயம் குடும்பம் உ.பி-யில் கோலோச்சுமா? வேர்விட்ட அவரது குடும்பம் அரசியலில் எப்படி விருட்சமாக வளர்ந்திருக்கிறது எனப் பார்ப்போம்.

1967-ம் ஆண்டு உ.பி. சட்டப்​பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏ-வாக முடிசூட்டினார். வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்த ராம் மனோகர் லோகியாவினால் ஈர்க்கப்பட்டு, 15 வயதில் அரசியலுக்கு வந்தவர் முலாயம் சிங் யாதவ். குஸ்தி வீரரான இவர், லோக்தள் (ஆ), ஜனதா தள் கட்சிகளில் பயணித்து 1992-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியைத் தொடங்கினார். அரசியலில் படிப்படியாக வளர்ச்சி பெற்றார். மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 1996-ல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். 2009, 2014-ல் எம்.பி ஆனார். 2012-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மகனுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்