‘தமிழகம் 60’ மல்லுகட்டு! - குமரி அ.தி.மு.க. கூத்து

பூசல்

ந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மாநிலம் உருவான நாள் என்பது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவம்பர் 1-ம் தேதி தமிழகம் உருவான தினம். அன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. மாநிலம் உருவாகி 60 ஆண்டுகள் ஆன நிலையில் ‘தமிழகம் 60’ கொண்டாட்டம் கன்னியாகுமரியில் நடந்தது.

இந்த விழாவில் அமைச்சர்கள் முன்னிலையில் அ.தி.மு.க-வினர் பிரிந்து நின்று மோதிக் கொண்டதுதான் ஹைலைட். தமிழக அரசு சார்பில் மார்ஷல் நேசமணியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால் மற்றும் தமிழ்மகன் உசேன், கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி., பங்கேற்றனர்.

விருதுநகரில் இருந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜனும் கடம்பூர் ராஜூம் காரில் கிளம்பினர்கள். குமரி மாவட்டம் வரும் அமைச்சர்களுக்கு வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால் போன்றவர்கள் தலைமையில் அ.தி.மு.க-வினர் தோவாளையில் காத்திருந்தனர். இதனை அறிந்த மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. காவல்கிணறு பகுதிக்குச் சென்று அங்கிருந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜனையும் கடம்பூர் ராஜூவையும் தோவாளை வழியாக அழைத்து வராமல், அஞ்சுகிராமம், மைலாடி, சுசீந்திரம் வழியாக நாகர்கோவிலுக்கு பல கிலோ மீட்டர் சுற்றி அழைத்துச் சென்றார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் தோவாளையில் காத்திருக்கும் தகவலை அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்ல, காரைத் திருப்பி தோவாளை வழியாக வந்து, வரவேற்பைப் பெற்று நாகர்கோவில் வந்து சேர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்