“பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மட்டம் வீக்கு!” - அரியலூர் அ.தி.மு.க. காமெடி!

சகுனம்

‘பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் கட்சி அலுவலகத்தைத் திறக்காமல் வைத்துள்ளார் அரியலூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன்’ என பரபரக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

பதவி திகிலுக்கு என்ன காரணம் என விசாரித்தோம்.

‘‘இந்த அலுவலக வேலையைத் தொடங்கிய மூன்று பேர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செல்வாக்கு குறைய இந்த அலுவலகம்தான் காரணம். இதனால், அலுவலக வேலையைத் தொடங்கினால் பதவி போய்விடும் என்ற பயத்தில் கொறடா இந்தப் பக்கமே வருவதில்லை. இந்த அலுவலகம் இரவு நேரத்தில் மது குடிக்கவும் தவறான செயல்கள் நடக்கவும் பயன்பட்டு வருகிறது. பில்டிங் ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. அ.தி.மு.க பிரமுகர்களின் பேஸ்மட்டம்தான் வீக்காக இருக்கிறது’’ என்று புலம்புகிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்