“அறம் அற்ற உணவுகளைத் தவிர்ப்போம்!”

நாகர்கோவிலில் தமிழ் மண்ணே வணக்கம்வழிகாட்டல்

ஜூனியர் விகடன் சார்பில் நாகர்கோவில் சுங்கான்கடை அய்யப்பா மகளிர் கல்லூரியில் ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் சந்திரலேகா வாழ்த்திப் பேசினார். ஆங்கிலத் துறை பேராசிரியை கீதா முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் குமாரி கிருஷ்ணவேணி வரவேற்றார். உதவிப் பேராசிரியை மயிலா, சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வைக்க நிகழ்ச்சி தொடங்கியது.
 
மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ‘‘நமது நாடு சுதந்திரமடைந்தபோது மக்களின் சராசரி ஆயுள் 40 வயதாகத்தான் இருந்தது. பல ஆளுமைகள் இந்த வயதுக்குள்ளாகவே இறந்து போனார்கள். தொற்று நோய்கள்தான் மனித ஆயுள் குறைவுக்கு முக்கியக் காரணம். ஆனால், இப்போது தொற்று நோய்களை கட்டுப்படுத்திவிட்டோம். இப்போது சராசரி ஆயுள் 70 வயது ஆகிவிட்டது. ஆனால், இன்றைய நவீன மருத்துவ உலகில், ‘புற்றுநோய்’, சர்க்கரைநோய் போன்ற தொற்றாநோய்கள் பெரிய சவாலாக இருக்கின்றன. அதற்கு இன்றைய துரித உணவுப் பழக்க வழக்கம்தான் முக்கியக் காரணம். எனவே, கல்வியோடு இன்றைய தலைமுறைகள் உணவுப் பண்பாடு, கலாசாரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

காலை உணவுகளில், நம்முடைய இட்லிதான் சிறந்தது என உலக உணவியலாளர்கள் சொல்கிறார்கள். பர்கர், பீட்சா நம்முடைய உணவா? அது நமக்கு அவசியமா? நமது பாரம்பர்யத்தோடு தொடர்புடைய சிறுதானியங்களை சாப்பிடாததால் இன்று பலவித நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். ரசாயனம் கலந்த உணவுகளைத் தவிர்ப்போம். நம் கண்முன் விளம்பரப்படுத்தப்படுகிற ஒவ்வொரு உணவிலும் அறம் கிடையாது. வணிகம் மட்டுமே இருக்கிறது. உணவு பாதுகாப்பானதா என்பதைவிட, அது நமக்கு தேவையா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். அடுத்த தலைமுறையைக் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. நமது பண்டைய உணவுப் பழக்கங்களையும், மரபுகளையும் மீட்டெடுத்து ஆரோக்கிய வாழ்வுக்கு உறுதி ஏற்போம்’’ என்று உணவு விழிப்பு உணர்வை விதைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்