இடித்ததோடு முடிந்துவிட்டதா?

இடிப்பு to உடைப்பு - ஃபிளாஷ்பேக்

ரு கொட்டும் மழை நாளில் மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தபோது இந்தியாவே குலுங்கியது. அதன் அருகில் இருந்த இன்னொரு 11 மாடி கட்டடம் அதேப் போன்ற ஒரு மழை தூறிக் கொண்டிருந்த போது தகர்க்கப்பட்டுவிட்டது. இடிந்து விழுந்தது முதல் உடைக்கப்பட்டது வரையிலான ஃபிளாஷ்பேக் இங்கே!

2013-ம் ஆண்டு திட்ட அனுமதி பெறப்பட்டு 11 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. தி ஃபெய்த் (The Faith), தி பிலிஃப் ((The Belief) என இரண்டு கட்டங்களுக்கும் தனித் தனி பெயர் சூட்டப்பட்டிருந்தது.

நிலத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 சதுர அடி. திறந்த வெளி பூங்கா, நீச்சல்குளம் ஆகியவற்றுக்கு 3 ஆயிரத்து 986.17 சதுர மீட்டர் ஒதுக்கப்பட்டது போக, கட்டடம் கட்ட அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், மண் வள ஆதார உறுதி சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் என்.ஓ.சி-க்கள் எதுவுமே இணைக்கப்படவில்லை. 

“விபத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இடி விழுந்ததால், கட்டடம் இடிந்துவிட்டது” என சொன்னார் கட்டட உரிமையாளர் பாலகுரு.

“இந்த விபத்துக்குக் காரணம் அதிகாரிகளின் விதிமீறல் இ்ல்லை; கட்டட உரிமையாளர்களின் விதிமீறல்தான் காரணம்” என சொன்னார் முதல்வர் ஜெயலலிதா.

கட்டட உரிமையாளர்கள் மனோகரன், முத்து காமாட்சி, கட்டிட பொறியாளர் வெங்கட சுப்பிரமணியம், வரைபட அமைப்பாளர் விஜய் மல்கோத்ரா, பொறியாளர் துளசி சங்கர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மரணத்தை விளைவிக்கக் காரணமாக இருத்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவானது.

நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. ‘மவுலிவாக்கம் விவகாரத்தை விசாரிக்கும் விசாரணை கமிஷன் நீதிபதி ரகுபதி மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவராக இருக்கிறார். குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். புதிய தலைமைச் செயலக கட்டட விசாரணை கமிஷன் தலைவராகவும் பணியாற்றுகிறார். இத்தனை பொறுப்புகளை வைத்திருக்கிற ரகுபதி எப்படி மவுலிவாக்கம் விவகாரத்தையும் விசாரிக்க நேரம் கிடைக்கும். ரகுபதியை விட்டால் வேறு யாரும் நீதிபதி இல்லையா? ரகுபதி என்ன அற்புத சக்தி படைத்த மனிதரா?’ என கண்டனம் தெரிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்