டி.என்.பி.எஸ்.சி தேர்வு - வழிகாட்டியது விகடன்!

விகடன் பிரசுரம் மற்றும் நடராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்களை தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் நடத்தின. போட்டித் தேர்வு பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், என்.ஐ.டி இயக்குநர் எஸ்.நடராஜ சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த முகாமில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ஜனனி சௌந்தர்யா, ‘‘அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் தன்னம்பிக்கையோடு கடின உழைப்பு இருக்க வேண்டும். பள்ளி பாடப்புத்தகங்​களில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படும். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு புத்தகங்களில் அனைத்து பாடங்களையும் போட்டித் தேர்வு கண்ணோட்டத்தோடு படிக்க வேண்டும்.

முந்தையை பரீட்சைகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்துப் பார்க்கும்போதுதான் கேள்விகள் உருவாக்கப்படும் விதத்தை புரிந்துகொள்ள முடியும். விடாமுயற்சியும் உழைப்பும் சரியான பாதையில் சென்றால் வெற்றி உறுதி. நகர்ப்புற மாணவர்களைவிட, தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்கள்தான் டி.என்.பி.எஸ்.சி தேர்தவில் டாப்பர்களாக வருகிறார்கள்’’ என்று உற்சாகப்படுத்திப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்